5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வடமாநிலங்களில் தொடரும் கனமழை.. உத்தர பிரதேசம், பீகாரில் 22 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் 13 பேரும், பீகாரில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் ஃபதேபூர், ரேபரேலி, மெயின்புரி, புலந்த் சாகர், கன்னௌஜ், கௌசாம்பி, பிரதாப்கர் உள்ளிட்ட 45 மாவட்டங்களில் கடந்த 24 நேரத்தில் கனமழை பெய்தது.

வடமாநிலங்களில் தொடரும் கனமழை..  உத்தர பிரதேசம், பீகாரில் 22 பேர் உயிரிழப்பு!
மழை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jul 2024 11:01 AM

உ.பி, பீகாரில் 22 பேர் பலி: இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் 13 பேரும், பீகாரில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் ஃபதேபூர், ரேபரேலி, மெயின்புரி, புலந்த் சாகர், கன்னௌஜ், கௌசாம்பி, பிரதாப்கர் உள்ளிட்ட 45 மாவட்டங்களில் கடந்த 24 நேரத்தில் கனமழை பெய்தது. தொடர் கனமழையால் பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கோசி, பாகமதி, கண்டக்கமலா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த மழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, பீகாரில் ஐஹானாபாத், கிழக்கு சம்பாரன் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

Also Read: மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் பலி.. கேரளாவில் தொடரும் உயிரிழப்புகள்!

அசாமில் 24 லட்சம் பேர் பாதிப்பு:

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மொத்தமுள்ள 29 மாவட்டங்களில் சுமார் 24.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குவாஹாட்டி ஜோதி நகரில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை திறந்த மழை நீர் வடிகாலில் நேற்று முன்தினம் விழுந்து உயிரிழந்துள்ளது. மேலும், துப்ரி மாவட்டத்தில் 7.78 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 63,490 ஹெக்டேர் விளைநிலங்களும் நீரில் மூழ்கின.

கச்சார், கம்ரூப், ஹைலகண்டி, ஹோஜாய், துப்ரி, நாகோன், மோரிகான், கோல்பாரா, பார்பெட்டா, திப்ருகார், நல்பாரி, தேமாஜி, போங்கைகான், லக்கிம்பூர், ஜோர்ஹாட், சோனிட்பூர், கோக்ரஜார், கரீம்கஞ்ச், தெற்கு சல்மாரா, தர்ராங் மற்றும் டின்சுகியா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 47,103 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கியுள்ள திப்ருகர் நகரில் கடந்த 8 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரம்மபுத்திரா, பராக் மற்றும் அதன் கிளை ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் வடிகால்களில் தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரங்கா தேசிய உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 77 விலங்குகள் உயிரிழந்தன. 94 விலங்குள் மீட்கப்பட்டன என மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. 7 பேர் உயிரிழப்பு!

Latest News