Crime: மீண்டும் அதிர்ச்சி.. மருத்துவமனையில் நர்ஸுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ந்த கொல்கத்தா!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பம் நாட்டையே உலுக்கியது. இதற்கு நீதி கோரி மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களும், பரபரப்பும் அடங்குவதற்கு மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அரசு சுகாதார மையத்தில் செவிலியரை அங்கிருக்கும் நோயாளி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் நர்ஸுக்கு நேர்ந்த கொடூரம்: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பம் நாட்டையே உலுக்கியது. இதற்கு நீதி கோரி மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களும், பரபரப்பும் அடங்குவதற்கு மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அரசு சுகாதார மையத்தில் செவிலியரை அங்கிருக்கும் நோயாளி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் இலம்பஜாரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அப்போது அதீத காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
அப்போது பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்தார். அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இந்த நிலையில், அந்த நோயாளி செவிலியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாக பாதிக்கப்பட்ட செவிலியர் கூறினார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூற, அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நோயாளியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட செவிலியர், “நான் இரவு பணியில் இருந்தபோது நோயாளி என்னை பாலியல் ரீதியான துன்புறுத்தினார். நாங்கள் இங்கு பணிபுரிவது பாதுகாப்பற்றதாக உணர்கிறோம். சரியான பாதுகாப்பு இல்லை. சரியான பாதுகாப்பு இருந்தால் ஒரு நோயாளி எப்படி இப்படிச் செயல்பட முடியும்?” என்றார்.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:
கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 13 வயது சிறுமி ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு CT ஸ்கேன் எடுக்கப்படும் போது இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Also Read: நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்த நபர்.. மோதிய லாரி.. வைரல் வீடியோ!
இரவு 10 மணியளவில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் சிறுமி அழுதுக் கொண்டே வெளியே வந்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.