5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Prajwal Revanna: ஆபாச வீடியோ விவகாரம்… பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு வீடியோ விளக்கம்

Obscene video issue: பிரஜ்வல் ரேவண்ணாவின் சுமார் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  வருகிற மே 31-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் தான் நீதித்துறையை நம்புவதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார்

Prajwal Revanna: ஆபாச வீடியோ விவகாரம்… பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு வீடியோ விளக்கம்
பிரஜ்வல் ரேவண்ணா
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 27 May 2024 21:29 PM

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில் சிறப்பு புலனாய்வு குழு முன்பு, விசாரணைக்கு ஆஜராவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வரும் மே 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராவேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். எனக்கு நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளதால், என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் வெளியே வருவேன் என்று பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

Also Read: Watermelon: தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!

மேலும், தனது குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். “எனது வெளிநாட்டுப் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஹசன் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நான் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். பயணத்தின் போதுதான் என் மீதான குற்றச்சாட்டு குறித்து எனக்கு தெரிய வந்தது. அப்போது என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நான் வெளிநாடு சென்று 3 நாட்களுக்கு பிறகு தான் இது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. எனது வழக்கறிஞர் மூலம் ஏழு நாட்கள் அவகாசம் கேட்டேன்நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பொதுமேடைகளில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதால், நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு எதிராக அரசியல் சதி நடந்ததால், நான் என்னை தனிமைப்படுத்த வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

Also Read:‘எனக்கு இப்படி ஒரு நோய்.. 41 வயதில் தெரிந்தது’ – நடிகர் பகத் பாசில் ஓபன் டாக்!

கடவுள், மக்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். நான் நிச்சயமாக மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். அதன் பிறகு என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று குடும்பத்தினருக்கு உருக்கமாக பிரஜ்வல் ரேவண்ணா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

 

 

சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் எங்கிருந்தாலும் உடனடியாக இந்தியா திரும்பி விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், ரேவண்ணாவின் தாத்தாவுமான தேவகவுடா வலியுறுத்திய நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Latest News