Odisha Assembly Election Results: ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி? முடிவுக்கு வரும் நவீன் பட்நாயக்கின் சகாப்தம்! - Tamil News | | TV9 Tamil

Odisha Assembly Election Results: ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி? முடிவுக்கு வரும் நவீன் பட்நாயக்கின் சகாப்தம்!

Updated On: 

04 Jun 2024 12:44 PM

Odisha Assembly Election: ஒடிசாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழல் உருவாகி வருகிறது. அதாவது, பாஜக 74 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், மற்றவை 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதன் மூலம் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி, ஒடிசாவில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.

Odisha Assembly Election Results: ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி? முடிவுக்கு வரும் நவீன் பட்நாயக்கின் சகாப்தம்!

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

Follow Us On

நவீன் பட்நாயக்கை வீழ்த்தி பாஜக ஆட்சி? ஒடிசாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு சூழல் உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதோடு, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 74 தொகுதிகளை கைப்பற்றினால், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 147 இடங்களிலும், பாஜக 147 இடங்களிலும், காங்கிரஸ் 145 இடங்களிலும் போட்டியிட்டன. மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதி என நான்கு கட்டங்களாக ஒடிசாவில் தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

Also Read: வாரணாசியில் கடும் போட்டி.. மோடி பின்னடைவா?

இந்த நிலையில், தற்போதை நிலவரப்படி, ஒடிசாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழல் உருவாகி வருகிறது. அதாவது, பாஜக 74 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், மற்றவை 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதன் மூலம் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி, ஒடிசாவில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல், மக்களவைத் தேர்தலிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 18 தொகுதிகளிலும், பிஜு ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

Also Read: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு ஆட்சி..? தோல்வி முகத்தில் ஜெகன்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version