Crime News: பழங்குடி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. மலத்தை சாப்பிட வைத்த கொடூரம்… ஷாக்!
ஒடிசா மாநிலம் பழங்குடி பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததோடு, அவருக்கு கட்டாயப்படுத்தி மலத்தை சாப்பிட வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 20 வயதான இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் பழங்குடி பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததோடு, அவருக்கு கட்டாயப்படுத்தி மலத்தை சாப்பிட வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 16 அன்று பங்கமுண்டா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜுரபந்தா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 20 வயதான இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் பழங்குடி பெண்ணை தாக்கியதோடு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர், பெண்ணின் விவசாய நிலத்தில் டிராக்டரை இயக்கி, பயிர்களை சேதப்படுத்தி இருக்கிறார்.
பழங்குடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை
இதனால் அந்த பெண் அவரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், அந்த பெண்ணை தாக்கி, மனித மலத்தை வலுக்கட்டாயமாக வாயில் திணித்து கொடுமைப்படுத்தி இருப்பதாக புகாரில் அந்த பெண் கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் உறவினர் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்த முயன்றபோது, குற்றச் சாட்டப்பட்ட இளைஞர் அவரையும் தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றச்சாட்டப்பட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி தப்பியோடிவிட்டதாக போலங்கிரின் காவல்துறை கண்காணிப்பாளர் கிலாரி ரிஷிகேஷ் தெரிவித்தார். அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளோம்.
Also Read : சென்னையில் அதிர்ச்சி.. பிஎம்டபிள்யூ கார் மோதி இளைஞர் பலி.. 100 மீ தூக்கி வீசப்பட்ட கோரம்!
வலுக்கட்டாயமாக மலத்தை சாப்பிட வைத்த கொடூரம்
அவரைத் தேடி அண்டை மாநிலங்களுக்கும் போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்பி நிரஞ்சன் பிசி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
இதனால் பழங்குடியினர் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பிறகு, உள்ளூர் பழங்குடியினர் அமைப்புகள் நீதி கோரி வருகின்றன. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். இதுபோன்ற சம்பவத்தை சகித்துக்கொள்ள முடியாது என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
Also Read : மேகவெடிப்பு.. ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை.. கரைபுரளும் வெள்ளம்!
தொடரும் கொடூரங்கள்
தொழில்நுட்ப ரீதியாக நாடு எவ்வளவு வளர்ந்தாலும், சாதிய வன்முறைகள், பாகுபாடுகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக நாட்டின் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் நின்றபாடில்லை.
குறிப்பாக, வட மாநிலங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், ஒடிசாவில் பழங்குடி பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மலத்தை சாப்பிட வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.