5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Loksabha Speaker: கைப்பிடித்து கூட்டிப்போன மோடி, ராகுல் காந்தி.. மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா!

நாடு விடுதலைக்கு பிறகு நடைபெற்ற 4வது சபாநாயகர் தேர்தல் இது. 1952, 1967,1976ஆம் ஆண்டுகளில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார். கடந்த 25ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.

Loksabha Speaker: கைப்பிடித்து கூட்டிப்போன மோடி, ராகுல் காந்தி.. மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா!
ஓம் பிர்லா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Jun 2024 14:34 PM

சபாநாயகரானார் ஓம் பிர்லா: 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்.பிக்கள் பதவியேற்றனர். இதனை அடுத்து, புதிய சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. பொதுவாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து ஒருமனதாக போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மரபாகும். ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியது. மக்களவை சபாநாயகர் பதவியில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கின. அதன்படி, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிட்டனர்.

4வது சபாநாயகர் தேர்தல்:

இதில், மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். பின்னர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 25ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.

நாடு விடுதலைக்கு பிறகு நடைபெற்ற 4வது சபாநாயகர் தேர்தல் இது. 1952, 1967,1976ஆம் ஆண்டுகளில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார்.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து:

பிரதமர் மோடி பேசுகையில், “சபையின் சார்பாக உங்களை வாழ்த்த விரும்புகிறேன். நீங்கள் இரண்டாவது முறையாக இந்த பதவியில் அமர்ந்திருப்பது மிகப்பெரிய பொறுப்பு.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறேன். உங்களின் இனிமையான புன்னகை முழு சபையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்” என்றார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ”இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களை வாழ்த்த விரும்புகிறேன். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். இந்த சபை இந்திய மக்களின் குரலை பிரதிபலிக்கிறது. அந்த குரலின் இறுதி நடுவர் நீங்கள் தான். அரசாங்கத்திற்கு அரசியில் அதிகாரம் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சி இந்திய மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, உங்கள் வேலையை செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகின்றன” என்றார்.

யார் இந்த ஓம் பிர்லா?

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியில் ஓம் பிர்லா (61) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். ராஜஸ்தான் எம்எல்ஏவாக 3 முறை பதவி வகித்த இவர், கடந்த 1991 முதல் 2003 வரை பாஜக இளைரணியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோட்டா தொகுதியில் முதல்முறையாக எம்.பியாக தேர்வானார். அப்போது மக்களவையில் இவரது செயல்பாடுகள் பாராட்டும்படி அமைந்தன. 86 சதவீத வருகையை பதிவு செய்த இவர்,671 கேள்விகளை எழுப்பியதோடு, 163 விவாதங்களில் பங்கேற்றார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஓம் பிர்லா சொந்த கட்சியினரே எதிர்பாராத வகையில் மக்களவை தலைவர் பதவிக்கு தேர்வானார். கடந்த 20 ஆண்டுகளில் மக்களவை தலைவர் பதவியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வகிக்கும் முதுல் நபராக ஓம் பிர்லா உள்ளார்.

 

Latest News