ஆடி அமாவாசை.. கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. முழு விவரம்.. - Tamil News | on account of aadi amavasai kerala high court issued order to make security and safety arrangments to the people gathering at riverpoint | TV9 Tamil

ஆடி அமாவாசை.. கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. முழு விவரம்..

Updated On: 

02 Aug 2024 19:26 PM

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை , பெளர்ணமி நாட்களில் முன்னோர்களுக்கு திதி ,தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது ஆற்றங்கரையோரங்களில் அதிகளவில் நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை வர இருப்பதால் மக்கள் ஆற்றங்கரையோரங்களில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மக்கள் கூடுவார்கள்.

ஆடி அமாவாசை.. கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. முழு விவரம்..

மாதிரி புகைப்படம்

Follow Us On

ஆடி அமாவாசைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு: கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை , பெளர்ணமி நாட்களில் முன்னோர்களுக்கு திதி ,தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது ஆற்றங்கரையோரங்களில் அதிகளவில் நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை வர இருப்பதால் மக்கள் ஆற்றங்கரையோரங்களில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மக்கள் கூடுவார்கள். அதேபோல அந்த நேரங்களில் முக்கிய கோயில்களுக்கும் பக்தர்கள் படை எடுப்பர்.

மேலும் படிக்க: Google Pixel முதல் Poco வரை.. ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

இந்த சூழலில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வர இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் வழிபாடுகளில் நடத்துவதற்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் கேரள காவல்துறைக்கும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கும் உத்தரவு புறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஸ்மார்ட்போன் உதவியால் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.. UNGA தலைவர் புகழாரம்!

சபரிமலை மட்டுமல்லாது வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. ஞாயிற்றுகிழமையில் வரும் அமாவாசை பெரிய அமாவாசையாக கருதப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கவில்லை என்றால் கூட இந்த அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான மக்கள் நதிக்கரையோரங்களில் திதி கொடுக்க கூடுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பொறுத்தவரையில் மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே நடை திறக்கப்படும். இதில் முக்கியமாக விஷுக்கனி, ஓணம், மகர ஜோதி, மகர விளக்கு, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version