Menstrual Leave: பெண்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு.. செம்ம அறிவிப்பு! - Tamil News | one day menstrual leave for working women in public and private sectors odisha became 3rd state to roll out policy | TV9 Tamil

Menstrual Leave: பெண்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு.. செம்ம அறிவிப்பு!

அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாதவிடாய் நேரங்களில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சில நாட்களில் அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Menstrual Leave: பெண்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு.. செம்ம அறிவிப்பு!

மாதிரிப்படம்

Updated On: 

16 Aug 2024 14:56 PM

மாதவிடாய் விடுப்பு: அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாதவிடாய் நேரங்களில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சில நாட்களில் அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, 2023ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: உஷார் மக்களே.. இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்?

இந்ந நிலையில், தற்போது ஒடிசா மாநிலத்தில் அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரவதி பரிடா தெரிவித்துள்ளார்.  கட்டாக்கில் நடந்த சுதந்திர தினம் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பெண்கள் மாதவிடாயின் முதல் நாளோ அல்லது இரண்டாவது நாளோ விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

சில தனியார் நிறுவனங்களும் மாதவிடாய் விடுமுறையை அளிக்கத்துள்ளது. சோமேட்டோ உணவு விநியோக நிறுவனம் ஆண்டுக்கு 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அளித்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது.  இருப்பினம், பெரும்பாலான மாநிலங்கள், தனியார் நிறுவனங்களில் மாதவிடாய் விடுப்பு என்ற முறையே இல்லை.

தமிழ்நாட்டில் எப்போது?

இதற்கிடையில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. அண்மையில், பெண் ஊழியர்களுககு மாதவிடாய் விடுமுறை குறித்த மாதிரித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Also Read: செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கொல்கத்தா மருத்துவர் கொலையை தொடர்ந்து வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!

மேலும், இந்த விஷயத்தை நன்றாக ஆராய்ந்து, குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் முடிவெடுக்குமாறும், இது தொடர்பாக மாநில அரசும் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு எப்போது இந்த அறிவிப்பை வெளியிடும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!