5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சம்பவம் கன்பாஃர்ம்.. நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. பா.ஜ.க க்ரீன் சிக்னல்!

One Nation One Election Bill: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா செவ்வாய்க்கிழமை (டிச.17, 2024) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது மக்களவை கூட்டத்தில் அமித் ஷா இருப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சம்பவம் கன்பாஃர்ம்.. நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. பா.ஜ.க க்ரீன் சிக்னல்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 16 Dec 2024 22:28 PM

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மசோதா நாளை (டிச.17, 2024) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து, குளிர்காலத்தின் இரு கூட்டங்களில் அவைகளின் கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். இந்திய அரசியலமைப்பில், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற மசோதா 129வது திருத்தம் மசோதாவாக இருக்கும்.

யார் அறிமுகப்படுத்துவார்?

இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைபெறும்பட்சத்தில் மேக்வால், மசோதாவை நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவிற்கு அனுப்புமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோருவார்.
அதாவது, இந்த மசோதாவுக்கு விரிவான ஆலோசனைகள் தேவைப்படும் என்பதால், அதை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மேக்வால் கோரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 400 ஆண்டுகள் பழமை.. 46 ஆண்டுகளாக பூஜை இல்லை.. முருகர், பார்வதி, சிவன் சிலை மீட்பு!

மத்திய பா.ஜ.க அரசு க்ரீன் சிக்னல்

இதையடுத்து, சபாநாயகர் அன்றைய தினம் கட்சிகளில் இருந்து முன்மொழியப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்களின் பெயர்களை கோருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எத்தனை கட்சிகள் ஆதரவு

முன்னதாக இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் “ஒரு தேசம், ஒரே தேர்தல்” குறித்த ஆலோசனையின் போது, ​​32 கட்சிகள் ஆதரித்துள்ளன எனக் கூறப்படுகிறது.
எனினும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியில் உள்ள தி.மு.க. இந்த யோசனையை நிராகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இந்தியாவில் கடந்த காலங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்துள்ளது. அதாவது, நாட்டில் 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் மாநில மற்றும் மக்களவை தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதற்கிடையில், ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்ற கருத்து 1983 முதல் பல அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளில் இடம்பெற்றுள்ளது.

அமித் ஷா பங்கேற்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசேதா தாக்கலின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேரவையில் இருப்பார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பேசவும் வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் அமித் ஷாவும் ஓர் உறுப்பினராக இருந்தார். ஆகவே மசோதா அறிமுகப்படுத்தப்படும் போது மக்களவையில் அமித் ஷா இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : “நான் என்ன கிறிஸ்டியனா?” மணிசங்கர் ஐயரை திணற வைத்த சோனியா காந்தி பதில்!

Latest News