தாக்கலானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. அடுத்து என்ன? எப்போது நடைமுறைக்கு வரும்?

One Nation One Election Bill: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில்  மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தாக்கலானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. அடுத்து என்ன? எப்போது நடைமுறைக்கு வரும்?

ஒரே நாடு ஒரே தேர்தல்

Updated On: 

17 Dec 2024 13:13 PM

பெரும் எதிர்ப்பாப்புக்கு  மத்தியில் மக்களவையில் ஒரே நாடு ஒரே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை  மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், மக்களவையில் அமளியும் ஏற்பட்டது.  நேற்றே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்  செய்ய இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா எப்போது அமலுக்கு வரும்? அடுத்து என்ன நடக்கும் போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

2014ஆம் ஆண்டுல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பாஜக முன்மொழிந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தவற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்ந்து தனது அறிக்கை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.

இக்குழுவின் பரிந்துரையை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அந்த குழு தனது அறிக்கையில் இரண்டு கட்டங்கள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை முதல் கட்டமாகவும், உள்ளாட்சி தேர்தலை இரண்டாவது கட்டமாக நடத்தலாம் என்று பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் திட்டத்திற்கு 2 மசோதாக்களை இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடிவு எடுத்த பாஜக, கடந்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்வது தொடர்பாக அரசமைப்பு சட்டப்பிரிவு 82ஏ-இல் புதிதாக துணைப் பிரிவு (2)-ஐ சேர்க்கவும், மக்களவை, சட்டப்பேரவைகளை கலைப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 83(2)-இல் புதிதாக துணைப் பிரிவுகள் (3), (4)-ஐ சேர்க்கவும், ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்துவது தொடர்பகா சட்டப்பிரிவு 327-ல் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த முதல் மசோதா வழிவகை செய்கிறது.

Also Read : “நான் என்ன கிறிஸ்டியனா?” மணிசங்கர் ஐயரை திணற வைத்த சோனியா காந்தி பதில்!

அடுத்து என்ன?

இரண்டாவது மசோதாவைப் பொருத்தரை, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுடன் தொடர்பாக 3 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பானதாகும். இந்த இரு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மசோதாக்களுக்கு மாநிலங்களை, மக்களவையில் ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதாவது,  அதே நேரத்தில் அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்களவையில் 545 எம்.பிக்களில் 364 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும்.

தற்போது பாஜக கூட்டணிக்கு 292 எம்.பிக்கள் உள்ளனர். அதேபோல, மாநிலங்களவியில் 245 எம்.பிக்களில் 164 எம்.பிக்களில் ஆதரவு தேவைப்படும். தற்போது பாஜக கூட்டணிக்கு 112 எம்.பிக்கள் உள்ளனர்.  இந்த இரு சபைகளிலும் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு தான் அடுத்த கட்டத்திற்கு நகரும்.

அதே போல, 50 சதவீத மாநில சட்டப்பேரவையும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் பாஜக மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே சட்டத்தை கொண்டு வர முயற்சித்து வருகிறது.    50 சதவீத மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்த பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக மாறும் என்று கூறப்படுகிறது.

Also Read : 400 ஆண்டுகள் பழமை.. 46 ஆண்டுகளாக பூஜை இல்லை.. முருகர், பார்வதி, சிவன் சிலை மீட்பு!

எப்போது அமலாகும்?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்தால்  2029 அல்லது 2035 அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமலுக்கு வரும் பட்சத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டமாக நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் நடத்தப்பட்டன. 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், இடையில், சில மாநிலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டது. மேலும், பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து இடைக்காலத் தேர்தல்களும் நடத்தப்பட்டது.  ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இணையத்தை கலக்கும் சோபிதாவின் நியூ ஆல்பம்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்