5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா? நாடாளுமன்றத்தில் நாளை மசோதா தாக்கல்!

One Nation One Election Bill: ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு கடந்த 11ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நாளை (டிசம்பர் 16) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா? நாடாளுமன்றத்தில் நாளை மசோதா தாக்கல்!
பிரதமர் மோடி (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Dec 2024 08:05 AM

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு கடந்த 11ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நாளை (டிசம்பர் 16) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 12ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நாளை தாக்கலாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அரசின் சில முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயுத்தமாகி வருகிறது என்று உறுதியானது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் வரும் 16ஆம் தேதி (நாளை) மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

இது அரசியல் சாசன 129-வது திருத்த மசோதாவாகும். அதாவது, மாநிலங்களில் மட்டுமில்லாமல், யூனியன் பிரதேசங்களான டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும் சட்டசபைகள் உள்ளன. மக்களவை தேர்தலுடன் யூனியன் பிரேதசங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக மற்றொரு மசோதாவை அர்ஜூன்ராம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.

Also Read : “சாவர்க்கரை அவமதிக்கிறீங்க” பாஜகவை கிண்டல் செய்த ராகுல் காந்தி!

ஒரே நாடு ஒரே தேர்தல் 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பரிசீலிக்க கடந்த 2023 செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இந்த ஆண்டு மார்ச் 14 அன்று சமர்ப்பித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிபுணர்களுடன் 191 நாட்கள் விவாதித்து, 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இக்குழு அளித்துள்ளது.

இதில், அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக் காலத்தை 2029-ஆம் ஆண்டு வரை நீட்டித்து, மக்களவைத் தேர்தலுடன் அவைத் தேர்தலையும் நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் புதிய தேர்தல் நடத்தலாம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.

இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 100 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். இதற்காக லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிக்கலாம். மேலும், பாதுகாப்புப் படைகள், நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றுக்கு முன்கூட்டியே திட்டமிடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Also Read : அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர கண்காணிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, குறைந்தபட்சம் ஆறு மசோதாக்கல் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது, மக்களவை, மாநிலங்களவை கால வரம்பு, தேர்தல் ஆணையம் அதிகாரிகள் உள்ளிட்ட 6 மசோதாக்கள் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது பாஜக கூட்டணிக்கு அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அதாவது, மக்களவையில் 543 எம்.பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு என்பது 362 பேர். ஆனால், என்டிஏ கூட்டணிக்கு 292 எம்.பிக்களின் ஆதரவு தான் இருக்கிறது.

அதேபோல, மாநிலங்களவையில் 164 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால் என்டிஏ கூட்டணிக்கு 112 எம்.பிக்ள் தான் இருக்கிறார்கள். எனவே, 2029ல் இந்த திட்டத்தை அமல்படுத்துவது பாஜகவுக்கு சாத்தியமில்லாதது என்று கூறப்படுகிறது.

Latest News