One Nation One Election : ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரும்.. பிரதமர் மோடி திட்டவட்டம்!
PM Narendra Modi | சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில், குஜராத்தில் ராஷ்ட்ரிய எக்தா திவாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் பயணமாக குஜராத் செல்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி துட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாடி பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விழாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரதமர் மோடி பேசிய உரை குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert : கொட்டித் தீர்க்கும் கனமழை.. பட்டாசு வெடிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்.. இன்றைய மழை நிலவரம் என்ன?
சர்தார் வல்லபாய் படேல் 149வது பிறந்தநாள்
சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில், குஜராத்தில் ராஷ்ட்ரிய எக்தா திவாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் பயணமாக குஜராத் செல்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்த ஆண்டு ராஷ்ட்ரிய எக்தா திவாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க : Share Market : தீபாவளியில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
விழாவில் பேசிய பிரதமர் மோடி
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (அக்டோபர் 31) இந்தியா இரண்டு சிறப்புகளை கொண்டுள்ளதாக கூறினார். ஒன்று இந்தியாவின் ஒற்றுமை தினம், மற்றொன்று தீபாவளி பண்டிகை என அவர் தெரிவித்தார். இந்த தீபாவளி பண்டிகை நாட்டை ஒளிர்விப்பது மட்டுமன்றி, இந்தியாவை பல உலக நாடுகளுடன் இணைக்கும் பண்டிகையாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று (அக்டோபர் 30) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Rajinikanth On TVK Party: ”விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி” தமிழக வெற்றிக் கழக மாநாட்டை புகழ்ந்து தள்ளிய ரஜினி!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விரைவில் அமல் – பிரதமர் மோடி
அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து வகையான தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Health Care: பட்டாசு புகை ஆபத்தானதா..? சுவாச பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்யலாம்..?
பொது சிவில் சட்டம்
இது குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவின் மக்கள் ஆட்சியை வலுப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன் மூலம் ஏற்படும் மாற்றங்களால் இந்திய புதிய உயரத்தை அடையும். இன்று, இந்தியா ஒரே நாடு பொது சிவில் சட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : IPL Retention 2025: தீபாவளியன்று இரட்டை வெடி.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடும் ஐபிஎல் அணிகள்..!
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த உரையின் மூலம் இந்தியாவில் விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.