5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Gandhi: அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் சேர்க்க வேண்டும் – சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்..

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், “ இது விதி 380 இல் சேர்க்கப்படாது என்பதை தெரிவிக்க நான் கடமைபட்டிருக்கிறேன். நாட்டில் நிலவும் உண்மையை தான் நான் எடுத்து கூறியுள்ளேன். நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும். எனது உரையின் பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சபாநாயகரின் இந்த செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது. பா.ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சில் குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்தன, இருப்பினும், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்

Rahul Gandhi: அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் சேர்க்க வேண்டும் – சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்..
ராகுல் காந்தி
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 02 Jul 2024 15:52 PM

மக்களவையில் ராகுல் காந்தி: மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் அவையில் சேர்க்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ “ஜூலை 1, 2024 அன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எனது உரையில் இருந்து எனது கருத்துக்கள் மற்றும் சில பகுதிகள் நீக்கபட்டது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். சபையின் நடவடிக்கைகளில் இருந்து சில கருத்துகளை நீக்குவதற்கான அதிகாரங்களை தலைவர் பெறுகிறார், ஆனால் குறிப்பிட்ட சில வார்த்தைகள் மட்டுமே, அவைகளின் தன்மை மற்றும் மக்களவையில் நடைமுறை விதிகளின் விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நள்ளிரவு 1 மணிக்கு, எனது உரையின் கணிசமான பகுதியானது, நடவடிக்கைகளில் இருந்து வெறுமனே நீக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்” என தெரிவித்துள்ளார்.


மேலும், “ இது விதி 380 இல் சேர்க்கப்படாது என்பதை தெரிவிக்க நான் கடமைபட்டிருக்கிறேன். நாட்டில் நிலவும் உண்மையை தான் நான் எடுத்து கூறியுள்ளேன். நீக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும். எனது உரையின் பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சபாநாயகரின் இந்த செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது.

Also Read: பட்ஜெட் 2024.. எந்த துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்?

பா.ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சில் குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்தன, இருப்பினும், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டது. இது முற்றிலும் ஒரு சார்பாக நடந்துக்கொள்ளும் விதம். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட எனது உரையை மீண்டும் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறென்” என தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த மக்களவை கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தாக்கி பேசினார். அதில் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் “வன்முறையிலும் வெறுப்பிலும்” ஈடுபட்டு வருவதாக கருத்து தெரிவித்தார். மேலும், அவர்கள், இந்துக்களே அல்ல. பாஜகவுடன் போரிட்டபோது கூட, ​​நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. நாங்கள் உண்மையைப் பாதுகாத்தபோது கூட ​​எங்களிடம் ஒரு துளி வன்முறை வெளிப்படவில்லை” என குறிப்பிட்டார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Also Read: உணவு டெலிவரி பாயின் உருக்கமான கடிதம்.. 2 வாரங்களில் நடந்த அதிசயம்.. நெகிழ்ச்சி சம்பவம்!