5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வராதது ஏன்? நிர்மலா சீதாராமன் பரபர விளக்கம்!

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த் பட்ஜெட்டை ஆளும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, ஆந்திரா, பீகாருக்கு மட்டும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வராதது ஏன்? நிர்மலா சீதாராமன் பரபர விளக்கம்!
நிர்மலா சீதாராமன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Jul 2024 16:36 PM

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த் பட்ஜெட்டை ஆளும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, ஆந்திரா, பீகாருக்கு மட்டும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆயோரின் மாநிலங்களுக்கு பாஜக அரசு கூடுதல் முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்குவது பிற மாநில நலன்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டமும் நடத்தினர். மேலும், மாநிலங்களவையிலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்ஜெட் குறித்து கண்டனம் தெரிவித்தார்.

Also Read: நேபாள விமான விபத்து.. விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பயணிகள் பலி!

பட்ஜெட்டில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் அவரது சொந்த மாநிலமான கர்நாடகா போன்ற மாநிலங்களின் பெயரை  குறிப்பிடவில்லை. பீகார் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களின் பெயர்கள் குறிப்படவில்லை என்றும் கார்கே கூறினார். இந்த பட்ஜெட் ஒரு சிலரை மகிழ்விப்பதற்கும் நாற்காலியைப் பாதுகாப்பதற்கும் மட்டுமே என்று கார்கே குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ” நேற்றைய பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களைப் பற்றி மட்டுமே பேசியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.  இது மோசமான குற்றச்சாட்டு. இந்த நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பல பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருக்கிறது. அனைத்து பட்ஜெட்டிலும், அனைத்து மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடும் வாய்ப்பு இருக்காது. அது காங்கிரஸ் கட்சிக்கும் நன்றாக தெரியும்.

நிதியமைச்சர் பதில்:

கடந்த பிப்ரவரி மற்றும் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல மாநிலத்தின் பெயரை நான் குறிப்படவில்லை. மகாராஷ்டிராவின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை. ஆனால், வத்வானில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடாததால் மகராஷ்டிரா புறக்கணிக்கப்படுகிறது என்று அர்த்தமா? மாநில அரசுகளின் பெயரை குறிப்பிடாததால் அந்த மாநிலத்திற்கு அரசின் திட்டங்கள் செல்லாது என்ற அர்த்தம் இல்லை” என்றார்.

மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு நிதியோ அல்லது திட்டங்களோ ஒதுக்கப்படவில்லை என்ற தவறான எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன். அவர்கள் தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட் உரையிலும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

Also Read: அமெரிக்க அதிபராவாரா திருவாரூர் பெண்? கமலா ஹாரிஸ் – தமிழ்நாடு தொடர்பு இதுதான்!

Latest News