5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad Landslide: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு.. 150-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தற்போதைய நிலை என்ன?

கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் நேற்று அதிகாலையில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது.  நான்கு மணி நேரத்தில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Wayanad Landslide: நிலச்சரிவால்  நிலைகுலைந்த வயநாடு.. 150-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தற்போதைய நிலை என்ன?
வயநாடு நிலச்சரிவு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 Jul 2024 10:24 AM

வயநாடு நிலச்சரிவு: கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் நேற்று அதிகாலையில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது.  நான்கு மணி நேரத்தில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் மேம்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மலைஅடிவாரத்தை ஒடியுள்ள 3 கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் பெண்கள்,குழந்தைகள் என சுமார் 156 பேர் உயிரிழந்ததாகவும், 130க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  116 உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது என்றும் கூறினார். இந்த பேரழிவைத் தொடர்ந்து, கேரள அரசு இரண்டு நாள் அரசு துக்கம் அறிவித்தது.

Also Read: பெயர் முதல் முகவரி வரை.. தகவல்களை வீட்டில் இருந்தபடியே சுலபமாக அப்டேட் செய்யலாம்!

தற்போதைய நிலை என்ன?

பல பகுதிகள் சுவடு தெரியாமல் சேற்று மண்ணில் புதைந்து போயுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட 3 கிராமங்களில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.  வயநாட்டில் 45 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 3000க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு மையத்தில் தங்கி இருப்பதாகவும் முதல்வர் பிணராயி விஜயன் கூறினார். மாநிலம் முழுவதும் மொத்தம் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணவத்தினர், தீயணைப்பு வீரர்கள், விமானப் படையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு நிவாரணம், மருத்துவ பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிவாரணம் அறிவிப்பு:

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்ததோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து தொலைப்பேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிகளுக்கு மத்திய அசு முழு உதவியை வழங்கும் என்றும் உறுதி அளித்தார். மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Also Read: ராகுல் காந்தியின் சாதி குறித்து பேசிய அனுராக் தாகூர்.. நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை.. நடந்தது என்ன?

ரெட் அலர்ட்:

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, திருச்சூர், பாலக்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் இடைவிடாத மழை காரணமாக, இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய 11 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest News