5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்.. காரணம் என்ன?

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை, எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டி எழுந்துள்ளது. குற்றிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ அமைந்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்.. காரணம் என்ன?
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 24 Jul 2024 12:06 PM

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி, சமூக நீதி, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள என நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை, எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டி எழுந்துள்ளது. குற்றிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ அமைந்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாதது கண்டித்தி இந்தியக் கூட்டணி எம்பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக எம்.பி.க்கள் தமிழ்நாடு சார்பில் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், பல மாநிலங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் நீதி கேட்டு போராடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

Latest News