” பாஜகவின் சக்கரவியூகம்.. அபிமன்யுவுக்கு நடந்தது, இன்று இந்தியாவுக்கு நடக்கிறது” – மக்களவையில் ராகுல் காந்தி

நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது ஆனால் பட்ஜெட்டில் அது குறித்து எதுவும் பேசவில்லை. கல்வித்துறைக்கு குறைந்த அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்த போதும் ஏன் அதனை செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் வகுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பாஜக அரசு நசுக்குகிறது என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

” பாஜகவின் சக்கரவியூகம்.. அபிமன்யுவுக்கு நடந்தது, இன்று இந்தியாவுக்கு நடக்கிறது” - மக்களவையில் ராகுல் காந்தி

மக்களவையில் ராகுல் காந்தி

Updated On: 

17 Oct 2024 10:46 AM

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாத்ததில் பேசினார். அப்போது பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். ”பல நூறு ஆண்டுகளுக்கு முன் அபிமன்யூவை சக்கரவியூகத்தில் சிக்கவைத்து 6 பேர் சேர்ந்து கொன்றனர். சக்கரவியூகத்தில் அபிமன்யூவிற்கு என்ன நடந்ததோ அதே தான் தற்போது இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சிறு குறி தொழிலாளிகள் என அனைவருக்கும் நடக்கிறது. இன்று வகுக்கப்பட்டுள்ள சக்கர வியூகத்திலும் 6 பேர் உள்ளனர். நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி ஆகியவர்கள் சக்கரவியூகத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்” என பேசியுள்ளார்.


மேலும், இன்று கோயிலில் இருக்கும் கருவறையில் கூட எல்லோரும் செல்ல முடியும் ஆனால் பாஜக வகுத்திருக்கும் இந்த சக்கரவியூகத்தில் இந்த 6 பேரை தவிர வேறு யாரும் நுழைய முடியாது என குறிப்பிட்டார். அவையில் அம்பானி, அதானி என்ற பெயர்களை பயன்படுத்தக்கூடாது என சபா நாயகர் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி அம்பானியை ஏ1 என்றும் அதானியை ஏ2 என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “ நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது ஆனால் பட்ஜெட்டில் அது குறித்து எதுவும் பேசவில்லை. கல்வித்துறைக்கு குறைந்த அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்த போதும் ஏன் அதனை செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் வகுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பாஜக அரசு நசுக்குகிறது.

மத்திய பட்ஜெட்டில் ஓபிசி பிரிவு மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ரயில்வே மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளின் ஒப்பந்தங்கள் ஏ1 மற்றும் ஏ2 இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் நாட்டின் தொழில்துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என பேசினார்.

மேலும் படிக்க: பலரும் அறியாத ஏலகிரி என்னும் சொர்க்கம்.. பாரா கிளைடிங் முதல் ட்ரக்கிங் வரை அனைத்தும் இங்கே!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?