உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வரம்பு.. பாட்னா உயர்நீதிமன்ம் அதிர்ச்சி தீர்ப்பு!
பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 65 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்த சட்டம் செல்லாது என பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின் கொண்டு வரப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தற்போது பாட்னா நீதிமன்றத் ரத்து செய்துள்ளது . அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் கீழ் சம உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறி 65 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.
பாட்னா உயர்நீதிமன்ம் அதிர்ச்சி தீர்ப்பு: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 65 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்த சட்டம் செல்லாது என பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின் கொண்டு வரப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தற்போது பாட்னா நீதிமன்றத் ரத்து செய்துள்ளது . பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் உள்ளார். பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள தொகை கணக்கெடுப்பு விவரங்கள் கடந்தாண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியானது. அதன்படி பீகார் மாநில மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 20 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும், பட்டியலின, பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் 20 சதவீதமும் உள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டது. பீகார் மக்கள் தொகையில் 15.5 சதவீதத்தின்ர் பொது பிரிவினர் எனவும் கண்டறியப்பட்டது. மேலும், பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குயிடினருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தி பீகார் சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த 65 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
Also Read: அம்மாடி! மாசத்துக்கு ரூ.7 லட்சம் சம்பளமா? திக்குமுக்காடும் பெங்களூரு தம்பதி!
உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வரம்பு:
அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின் கொண்டு வரப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தற்போது பாட்னா நீதிமன்றத் ரத்து செய்துள்ளது. அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் கீழ் சம உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறி 65 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, ”இத்தகைய தீர்ப்புகள் சமூக நீதிக்கான இலக்கை நோக்கிய பயணத்தை மேலும் நீட்டிக்க செய்கிறது. தமிழ்நாடு இதற்காக பல ஆண்டுகளாக போராடியது நினைவிருக்கிறது. அதையே செய்வோம்.
ஆனால், வழக்கை தொடர்ந்த மனுதாரர்களை திரைமறைவில் இருந்து இயக்குபவர்களின் சமூகப் பின்ணி என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். சாதி வாதி கணக்கெடுப்பின் போது அதையே பார்த்தோம். நிதீஷ்குமார் தயவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இப்போது ஆட்சியில் உள்ளது. அவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று மக்கள் தொகையில் அதிகம் உள்ளவர்களின் உரிமைகளை மீட்டுக்க வேண்டும்” என்றார்.
Also Read: மலையில் கார் ஓட்ட பயிற்சி.. 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ