AP Pawan Kalyan: “பவன் கல்யான் எனும் நான்” அமைச்சராக பதவியேற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
சந்திரபாபு நாயுடு பதவியேற்பை தொடர்ந்து, நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த ஆந்திர தேர்தலில் பவன் கல்யாண் முக்கிய பங்கை வகித்தார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. விரையில் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேர் அமைச்சராக பதவியேற்றுள்ளனர். அதன்படி, ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பவன் கல்யாண், நாதெண்டலா மனோகர், கந்துலா துர்கேஷ் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். கட்சி தொடங்கிய 10 ஆண்டுகால கடும் முயற்சிக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றுள்ளார் பவன் கல்யாண்.
அமைச்சரானார் பவன் கல்யாண்: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திராவில் 21 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக இன்று பதவியேற்றார்.
Also Read: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நாடாளுமன்ற கூட்டம்.. எப்போது தொடங்குகிறது?
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜயவாடா விமான நிலையம் அருகே கேசரபல்லி எனும் இடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சந்திரபாபு நாயுடு பதவியேற்பை தொடர்ந்து, நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த ஆந்திர தேர்தலில் பவன் கல்யாண் முக்கிய பங்கை வகித்தார்.
#WATCH | Jana Sena chief Pawan Kalyan takes oath as the minister of the Andhra Pradesh Government. pic.twitter.com/v3HAz9dYyG
— ANI (@ANI) June 12, 2024
இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. விரையில் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேர் அமைச்சராக பதவியேற்றுள்ளனர். அதன்படி, ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பவன் கல்யாண், நாதெண்டலா மனோகர், கந்துலா துர்கேஷ் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். கட்சி தொடங்கிய 10 ஆண்டுகால கடும் முயற்சிக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றுள்ளார் பவன் கல்யாண்.
அமைச்சரவை பட்டியல்:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், நாரா லோகேஷ், அச்சன்நாயுடு, நாதெண்டலா மனோகர், கொள்ளு ரவீந்திரா, வாங்கலபுடி அனிதா, பி.நாராயணா, நிம்மல ராமாநாயுடு, பையாவுலா கேசவ், சத்யகுமார் யாதவ், என்எம்டி பரூக், ஆனம் ரமணராய ரெட்டி, தோலா பால வீராங்கனைசுவாமி, அங்கானி சத்தியபிரசாத், கொலுசு பார்த்தசாரதி, கோட்டிபட்டி ரவி, கந்துல துர்கேஷ், டிஜி பாரத், பிசி ஜனார்தன் ரெட்டி, லெட்டி சுபாஷ், கொண்டபல்லி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். சந்திரபாபு நாயுடு தவிர்த்து 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேருக்கு சந்திரபாபு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 8 பேர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர், பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: சந்திரபாபு நாயுடு 4.0.. ஆந்திர முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார்!