5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pawan Kalyan: கூட்டணியில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவுடன் மோதும் பவன் கல்யாண்? பின்னணியில் பாஜக!

Pawan Kalyan vs Chandrababu Naidu: ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் அனிதா அமைதியாக இருந்தால், அவரது பதவியை நானே ஏற்பேன் என்றும் துணை முதல்வர் பவன் கல்வயாண் தெரிவித்துள்ளார். மேலும், நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Pawan Kalyan: கூட்டணியில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவுடன் மோதும் பவன் கல்யாண்?  பின்னணியில் பாஜக!
பவன் கல்யாண் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Nov 2024 12:50 PM

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் அனிதா அமைதியாக இருந்தால், அவரது பதவியை நானே ஏற்பேன் என்றும் துணை முதல்வர் பவன் கல்வயாண் தெரிவித்துள்ளார்.  ஆந்திரா மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ.5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது நிகழ்ச்சியில் பேசும் போது ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் உள்துறை அமைச்சர் தகுதியற்றவராக உள்ளார் என்று கூறியுள்ளார்.

“உள்துறை அமைச்சர் பதவியை நானே ஏற்பேன்”

அதாவது, “ஆந்திராவில் அமைதியும் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது. போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். சாதி, மதம் குற்றவாளிகளுக்கு கிடையாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும். யாராக இருந்தாலும், உறவினர் என்றும் ரத்த பந்தம் என கூறி வந்தால் தவறு செய்திருந்தால் அவர்களையும் சேர்த்து அடித்து உதையுங்கள்.

டிஜிபி, எஸ்பி, ஆட்சியர்களுக்கு கூறுகிறேன். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டும் என்றும் கூறினார். உள்துறை அமைச்சர் அனிதாவிடமும் சொல்கிறேன். நீங்கள் தான் உள்துறை அமைச்சர்.

Also Read : டெலிவரி தூரத்தை உயர்த்திக் காட்டிய வழக்கு.. ஸ்விக்கிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்!

நான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். இல்லாவிட்டால் உள்துறையையும் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். யோகி ஆதித்யநாத் போல நீங்கள் இருக்க வேண்டும்.

அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு கேட்க மட்டும் இங்கு வரவில்லை. உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. அனைவரும் சிந்திக்க வேண்டும்.. நான் உள்துறையை கேட்கவோ எடுக்கவோ முடியாது என்பதல்ல. நான் செய்தால், இந்த மக்கள் யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும். எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

கூட்டணியில் விரிசலா?

நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டாம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.

அண்மையில் ஆந்திரா பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் அடங்கியது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.

அதே நேரத்தில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்த, முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார். அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

Also Read : முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம்..

பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இப்படியான சூழலில், பவன் கல்யாண் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனால், சந்திரபாபு நாயுடுவின் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் பி.நாராயணன், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, அமைச்சர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல அவருக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

Latest News