பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிய அதிகாரிகள்.. என்னாச்சு?

PM Modi : பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்க்கண்ட சென்றுவிட்டு டெல்லிக்கு திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லி திரும்புவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிய அதிகாரிகள்.. என்னாச்சு?

பிரதமர் மோடி (picture credit : PTI)

Updated On: 

15 Nov 2024 16:37 PM

பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்க்கண்ட சென்றுவிட்டு டெல்லிக்கு திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் டியோகர் விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் டெல்லி திரும்புவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஜார்க்கண்ட மாநிலத்தில் மொத்த உள்ள 81 சட்டப்பேரவை தெதாகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமரின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கும் கடந்த 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வரும் 20ஆம் தேதி மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிகளின் ஆட்சி நடைபெறுகிறது.

ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.  முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை  அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பரப்புரைக்காக ஜார்க்கண்ட் சென்றிருந்தார். பழங்குடியினரின் அடையாளமாக பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி, ஜார்க்கண்டில் இரண்டு பேரணிகளில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Also Read : மைனர் மனைவியுடன் பாலியல் உறவு சரியா? மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

என்ன நடந்தது?

இதன் பிறகு  பிரதமர் மோடி டெல்லி செல்ல தயாராக இருந்தார். அப்போது, பிரதமர் மோடி செல்ல  இருந்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், டியோகர் விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் டெல்லி திரும்புவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

முன்னதாக, பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் நடந்த கோடாவில் 80 கிமீ தொலைவில் உள்ள தியோகாரில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க 45 நிமிடங்கள் அனுமதி வழங்கவில்லை.  45 நிமிடங்கள் கழித்து ஹெலிகாப்டர் புறப்பட அனுமதிக்கப்பட்டது.


இதனால், எதிர்க்கட்சித் தலைவரின் பிரச்சார அட்டவணையை சீர்குலைப்பதற்காக இந்த தாமதம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியது. முன்னதாக தனது பேரணியில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். அதாவது, ” பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ராகுல் காந்தி சதி செய்கிறார்.

காங்கிரஸுக்கு ஆபத்தான நோக்கங்கள் உள்ளன. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்கிரஸ் சதி செய்கிறது. இளவரசரின் (ராகுல் காந்தி) தந்தை இடஒதுக்கீட்டை அடிமை, கொத்தடிமை என்று கூறினார். ஆனால் அவர் பின்னர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

Also Read : எதுக்கு 2 நாள் லீவ்? கவலைப்படும் இன்போசிஸ் நாராணய மூர்த்தி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

அவரது தந்தை விளம்பரங்களை வெளியிட்டார். இடஒதுக்கீட்டை நீக்குங்கள் என்று கூறினார். காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் ஆளும் ஜேஎம்எம், ஜார்கண்டில் ஊடுருவுபவர்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக ஆக்க உதவுகிறது” என்று விமர்சித்தார்.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?