Kanchanjunga Train Accident: நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து.. 15 பேர் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவிப்பு!

கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kanchanjunga Train Accident: நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து.. 15 பேர் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவிப்பு!

ரயில் விபத்து

Updated On: 

17 Jun 2024 17:14 PM

நிவாரணம் அறிவிப்பு: கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்து வேததனை அடைந்தேன். எனது எண்ணங்களுக்கு பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளும் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

Also Read: EVMஐ ஹேக் செய்ய முடியுமா? கொளுத்தி போட்ட எலான் மஸ்க்.. மல்லுக்கட்டும் மாஜி அமைச்சர்!

ரயில் விபத்து நடந்தது எப்படி?

திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி கஞ்சன் விரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அசாம் வழியாக மேற்கு வங்கம் செல்லும் இந்த ரயில் அம்மாநிலத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின் பகுதியில் 3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஒரே பாதையில் இரண்டு ரயில்களும் பயணித்ததாகவும், முன்னே சென்ற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சரக்கு ரயில் சிக்னலை மீறியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல சுற்றுலா தளமான டார்ஜிலிங் செல்வதற்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலை பயன்படுத்துகின்றனர். இந்த ரயிலில் தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், உயிரிழந்த எண்ணிக்கை குறைவுக்கான காரணங்கள் வெளியாகி உள்ளன. விபத்தின் தீவிரம் இருந்தபோதிலும் ஒப்பீட்டளவில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு என்றே சொல்லலாம். ஏனென்றால், கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலில் கடைசி பெட்டியில் வெறும் பொருட்கள் மட்டும் ஏற்றப்படுகிறது.

இது உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்ததற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சரக்கு பின்பக்கத்தில் இருந்து மோதியதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது. பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தது. இதில் இரண்டு பெட்டிகளின் இருந்த பயணிகளுக்கு தான் பாதிக்கப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி உற்சாகம்!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!