5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“மத்தியில் வலுவான அரசை என்டிஏ கூட்டணி அமைக்கும்” செய்தியாளரிடம் மோடி பேச்சு

மத்தியில் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "ஆசாதிகா அம்ரித் மஹோத்சவுக்குப் (75வது சுதந்திர தினம்) பிறகு முதல் தேர்தல் நடந்துள்ளது.  தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும். இந்த 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகிற்கு விஸ்வபந்துவாக (நண்பர்) உருவெடுத்துள்ளது. அதனால் ஏற்படும் அதிகப்படியான நன்மைகள் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

“மத்தியில் வலுவான அரசை என்டிஏ கூட்டணி அமைக்கும்”  செய்தியாளரிடம் மோடி பேச்சு
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jun 2024 19:56 PM

மத்தியில் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “குடியரசுத் தலைவர் இப்போதுதான் என்னை அழைத்து பிரதமராகப் பணிபுரியச் சொன்னார். பதவியேற்பு விழா குறித்துத் தெரிவித்தார். வரும் 9ஆம் தேதி மாலையில் நாங்கள் நிம்மதியாக இருப்போம் என்று குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளேன். நாங்கள் ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் பட்டியலை ஒப்படைப்போம்.  ஆசாதிகா அம்ரித் மஹோத்சவுக்குப் (75வது சுதந்திர தினம்) பிறகு முதல் தேர்தல் நடந்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும். இந்த 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகிற்கு விஸ்வபந்துவாக (நண்பர்) உருவெடுத்துள்ளது. அதனால் ஏற்படும் அதிகப்படியான நன்மைகள் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


உலகளவில் இந்தியாவும் பல நெருக்கடிகள், பல பதட்டங்கள், பேரழிவுகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தபோதும், வேகமாக வளரும் பொருளாதாக நாம் இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றாவது முறை நாட்டிற்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.


நாடு வேகமாக வளர்ச்சி அடையும் என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். 16, 17வது மக்களவையில் இருந்தது போன்று 18வது மக்களவையிலும் அதே வேகத்திலும், அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். கடந்த இரண்டு காலகட்டங்களில், நாடு முன்னேறிய வேகம், ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம்” என்றார்.

Also Read: ராஷ்டிரபதி பவனில் இருந்து வந்த அழைப்பு.. ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி!

Latest News