ராஷ்டிரபதி பவனில் இருந்து வந்த அழைப்பு.. ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மோடி சந்தித்து தன்னை ஆதரிக்கும் எம்.பிக்களின் பட்டியலை வழங்கினார். மேலும், ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை அடுத்து, 3வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் முர்மு அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து, நாளை மறுநாள் ஜூன் 9ஆம் தேதி பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.
ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி: ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெரும்பான்மைக்கு கூட்டணி கட்சிகளை நம்பி கைகோர்த்த பாஜக நரேந்திர மோடியை ஒருமனதாக தேர்வு செய்தது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஜக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியை அமைக்க உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 16 எம்.பிக்களுடன் தெலுங்கு தேசம் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல, 12 எம்.பிக்களுடன் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளன. இவர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இது உறுதி செய்யப்பட்டது.
Also Read: “பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு” தமிழ்நாட்டை குறிப்பிட்ட மோடி.. நாடாளுமன்றத்தில் பரபர!
#WATCH | Delhi: Narendra Modi meets President Droupadi Murmu at the Rashtrapati Bhavan and stakes claim to form the government.
He was chosen as the leader of the NDA Parliamentary Party today. pic.twitter.com/PvlK44ZC2x
— ANI (@ANI) June 7, 2024
மோடி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த குடியரசு தலைவர்:
இதனை அடுத்து, இன்று டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டத்தில் என்டிஏ தலைவராக மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் முன்மொழிய அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மோடி சந்தித்து தன்னை ஆதரிக்கும் எம்.பிக்களின் பட்டியலை வழங்கினார்.
மேலும், ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை அடுத்து, 3வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் முர்மு அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து, நாளை மறுநாள் ஜூன் 9ஆம் தேதி பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.
Also Read: “பிரதமர் மோடியுடன் எப்போதும் இருப்பேன்” என்.டி.ஏ கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச்சு!