5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Modi: “ரிமோட் கண்ட்ரோல் அரசு” மாநிலங்களவையில் சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்திய ஜனநாயகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு அசாதாரண நிகழ்வு. ஆனால் எதிர்க்கட்சிகள் அதன் முக்கியத்துவத்தை வேண்டுமென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பெரும் சத்தத்தை உருவாக்கி நாட்டு மக்களின் இந்த முக்கிய முடிவை மறைக்க முயல்கின்றனர். மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

PM Modi: “ரிமோட் கண்ட்ரோல் அரசு” மாநிலங்களவையில் சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2024 17:16 PM

பிரதமர் மோடி உரை: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்திய ஜனநாயகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு அசாதாரண நிகழ்வு. ஆனால் எதிர்க்கட்சிகள் அதன் முக்கியத்துவத்தை வேண்டுமென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பெரும் சத்தத்தை உருவாக்கி நாட்டு மக்களின் இந்த முக்கிய முடிவை மறைக்க முயல்கின்றனர். மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்களை நேசித்தார்கள். பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தால் என்னைப் போன்று பலர் இங்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது.

நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடுவோம் என்று எங்கள் அரசு மக்களவையில் கூறியபோது, இன்று அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எடுத்துக் கொண்டு உலககெங்கும் அலைந்து திரிபவர்கள் ஜனவரி 26ஆம் தேதியை அரசியல் சாசனமாக கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் செயல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தை எங்களால் பாதுகாக்க முடியும் என்பதை தெரிந்ததால் தான் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

Also Read: ஹத்ராஸ் விபத்து.. காவல் துறையில் வேலை.. பின் கடவுளின் சேவகர்.. யார் இந்த போலே பாபா?

“அரசியலமைப்புச் சட்டத்தின் எதிர்ப்பாளர் காங்கிரஸ்”

எங்கள் ஆட்சியில் அரசியலமைப்பு ஒரு கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. எங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழிகாட்டுகிறது. அதில் இருக்கும் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை” என்றார். காங்கிரஸ் ஆட்சி முறையை குறிப்பிட்டு பேசிய மோடி, ” அரசியலமைப்பு என்ற வார்த்தையே காங்கிரஸுக்கு பொருந்தாது. அரசியலமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி செய்கையில் Auto Pilot, Remote Pilot என்ற முறையில் ஆட்சி செய்தனர்.

அவர்கள் செயலாற்றுவதில் நம்பிக்கையற்வராக இருந்தனர்” என சோனியா காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். அதாவது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவரை சோனியா காந்தி வழிநடத்தினர் என சோனியா காந்தியை பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு கருத்து கூற எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சில எம்.பிக்கள் முழக்கமிட்டு அவையில் இருந்து வெளியேறினர். வெளிநடப்பு குறித்து பேசிய மோடி, ”எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லவே முடியாது. தப்பி ஓடவே முடியும். பொய்யைப் பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவையை அவமதிக்கிறார்கள்” என்றார்.

மேலும், ”உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறும்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனனைத்து அம்சங்களிலும் சாதகமான தாக்கம் ஏற்படும். கடந்த 10 ஆண்டுகளைவிட அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி பெறும். எங்கள் மூன்றாம் காலாண்டில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Also Read: பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் ஆபத்து.. கொடிய கிருமிகள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!