5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில், இன்று மாநிலங்களவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான மணிப்பூரில் இனக்கலவரம் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2024 17:17 PM

”ஒரு நாள் மணிப்பூர் உங்களை நிராகரிக்கும்” நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில், இன்று மாநிலங்களவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான மணிப்பூரில் இனக்கலவரம் குறித்து பேசிய பிரதமர் மோடி , ”வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகிறது. மணிப்பூரில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 11,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மணிப்பூரில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அமைதியை மீட்டுக்க மாநிலமும், மத்திய அரசும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்து வருகிறது. முந்தைய அரசுகள் அவ்வாறு செய்யவில்லை. உள்துறை அமைச்சர் பல நாட்கள் அங்கேயே  தங்கினார். அதிகாரிகள் அங்கு அடிக்கடி சென்று வருகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். ஒரு நாள் மணிப்பூர் உங்களை நிராகரிக்கும்.

Also Read: பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் ஆபத்து.. கொடிய கிருமிகள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மணிப்பூரையும் அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், மணிப்பூர் நீண்ட சமூகப் போராட்ட வரலாற்றைக் கொண்டிருப்பதை அறிவார்கள். . இந்தப் போராட்டங்களால் மணிப்பூர் போன்ற சிறிய மாநிலத்தில் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியிருந்தது என்பதை காங்கிரஸ் கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்.ஏறக்குறைய 30 ஆண்டுகால வன்முறையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, 1993-ம் ஆண்டிலும் இதேபோன்ற நீண்ட கால வன்முறை நடந்துள்ளது” என்றார்.

“நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றனர்”

தொடர்ந்து, நீட் குறித்து பேசிய மோடி, “குடியரசுத் தலைவர் நீட் வினாத்தாள் கசிவு குறித்து பேசினார். அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றனர். தங்கள் அரசியில் ஆதாயத்திற்காக இளைஞர்களின் எதிர்காலத்தில் விளையாடுகின்றனர். வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீத கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளோம். மாணவர்கள் தேர்வு பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தும் சூழலை உருவாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. நம் நாட்டு இளைஞர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், உங்களை ஏமாற்றுபவர்களையும், மோசடி செய்பவர்களையும் இந்த அரசாங்கம் விட்டுவைக்காது” என்றார்.

Also Read: “ரிமோட் கண்ட்ரோல் அரசு” மாநிலங்களவையில் சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!