5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Narendra Modi Swearing-in Ceremony Guest List: 3வது முறை பிரதமராகும் மோடி.. பதவியேற்பில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாள நாட்டு பிரதமர் புஷ்ப கமல் கஹல், பூடான் பிரதமர் டிஷரிங் டொபேய், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் முகமது முஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Narendra Modi Swearing-in Ceremony Guest List: 3வது முறை பிரதமராகும் மோடி.. பதவியேற்பில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்!
மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jun 2024 14:55 PM

மோடி பதவியேற்பு விழா: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைப் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்தது. 240 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் 52 எம்.பிக்களின் உதவியுடன் நாளை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். நாளை இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு, பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தலைநகர் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வரகிறது. ஏற்கனவே நரேந்திர மோடி 2014,2019 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். நாளை அவர் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார்.

Also Read: மோடி பதவியேற்பு விழா.. சென்னை ரயில் ஓட்டிக்கு அழைப்பு.. யார் இவர்?

கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்:

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாள நாட்டு பிரதமர் புஷ்ப கமல் கஹல், பூடான் பிரதமர் டிஷரிங் டொபேய், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் முகமது முஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்லில் முய்சு வென்றது முதலே இந்தியா-மாலத்தீவு இடையே நிலவி வந்த சுமூகமான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், பதவியேற்பு விழாவிற்கு அதிபர் முகமது முஸ்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மோடி. அவர் டெல்லிக்கு வருவதை முன்னிட்டு, வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே பிரதமர் மோடி மற்றும் முய்ஸு ஆகியோர் அடங்கிய பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. பதவியேற்பைத் தொடர்ந்து, அன்று மாலை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் விருந்தில் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த 2019 ஆண்டில் BIMSTEC நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையல், இந்தாண்டு அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அழைப்பு என்பது விடுக்கப்பட்டுள்ளது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய விஸ்டா திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ரயில்வே துறை ஊழியர்கள், திருநங்கைகள், பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள், மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகள் உள்ளிட்டோர் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: முன்னணி ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் காலமானார்!

Latest News