Independence Day 2024: 2047-க்குள் விக்சித் பாரத் இலக்கை அடையலாம்.. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!
PM Modi Speech : இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா 'வளர்ந்த பாரம்' என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
கொடியேற்றும் மோடி: இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா ‘வளர்ந்த பாரம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி. செங்கோட்டையில் கொத்தளத்தில் இருந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், மற்றும் பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனே ஆகியோர் வரவேற்றனர்.
டெல்லி பகுதி ஜெனரல் கமாண்டிங் அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமாரை பாதுகாப்பு செயலாளர் பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர், டெல்லி பகுதி ஜெனரல் கமாண்டிங் அதிகாரி மோடியை அணிவகுப்பு மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்து சென்றார். அங்கு முப்படை மற்றும் டெல்லி காவல்படை இணைந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தியது. அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்கு சென்றார். அங்கு டெல்லி பொது கமாண்டிங் அதிகாரி கொடியை ஏற்றுவதற்காக பிரதமர் மோடியை மேடைக்கு அழைத்து சென்றார்.
11வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி
இந்நிலையில், நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காலனிய பிரிட்டிஷ் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்த 40 கோடி மக்களின் ரத்தத்தை சுமந்த பெருமை நமக்கு உண்டு. இன்று 140 கோடி மக்களாக இருக்கிறோம். தீர்மானித்து ஒன்றுபட்டால் வழியில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து 2047-க்குள் விக்சித் பாரத் இலக்கை அடையளாம். தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. இந்த நாட்டுக்காக இன்னுயிரை தந்தவர்களை போற்றுவோம் என்றார்.
இயற்கை பேரிடரால் குடும்பங்களை இழந்தவர்களுக்கு ஆதரவு
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டும் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றம் காரணமாக நமது கவலைகளை அதிகரித்து வருகின்றன. இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை, சொத்துக்களை இழந்துள்ளனர். தேசமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இன்று அவர்கள் அனைவருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்றார்.