PM Modi Russia Visit: 3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்.. - Tamil News | | TV9 Tamil

PM Modi Russia Visit: 3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்..

Published: 

08 Jul 2024 09:04 AM

பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாஸ்கோவிற்கு செல்கிறார். மாஸ்கோ சென்றடைந்த பின் பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புதினுடன் தனிப்பட்ட விருந்தில் பங்கேற்க உள்ளார். அதன்பின் இருநாட்டு தலைவர்களும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களால் பரஸ்பர நலன்கள் பற்றி பேசுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

PM Modi Russia Visit: 3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Follow Us On

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம்: இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசுமுறை பயணமாக ரஷ்யா செல்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கப்பட்ட பின் பிரதமர் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவே ஆகும். பல முக்கிய உலகப் பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடு பற்றி பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து ஆஸ்திர்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இது 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாடு ஆகும். கடைசி உச்சிமாநாடு 2021 டிசம்பரில் புது டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாஸ்கோவிற்கு செல்கிறார். மாஸ்கோ சென்றடைந்த பின் பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புதினுடன் தனிப்பட்ட விருந்தில் பங்கேற்க உள்ளார். அதன்பின் இருநாட்டு தலைவர்களும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களால் பரஸ்பர நலன்கள் பற்றி பேசுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: மழைக்காலத்தில் அதிகரிக்கும் வைரஸ் நோய்கள்… பாதுகாக்கும் வழிமுறைகள்..!

இதனை தொடர்ந்து நாளை காலை ரஷ்யாவில் இருக்கும் இந்திய சமூகத்தினருக்கு இடையே உரையாற்றுகிறார். அதன்பின் ரஷ்யாவில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், கண்காட்சி மையத்தில் உள்ள கண்காட்சி VDNH கண்காட்சி மையத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின் பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 நாள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ரஷ்யா பயணத்தை முடித்த பின் நாளை பிற்பகல் ஆஸ்திரியா புறப்பட்டு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அங்கு உள்ள இந்திய சமூகட்த்தினரிடையே உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின் பிரதமர் மோடி 10 ஆம் தேதி இந்தியா திரும்புகிறார்.

Also Read: காபி பருகுவதால் இவ்வளவு பக்க விளைவுகளா?… அதிர்ச்சி தகவல்கள்..!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version