5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Navrathiri: அப்படிப்போடு.. நவராத்திரி பண்டிகைக்கு பாடல் எழுதிய பிரதமர் மோடி!

9 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க அம்மனை போற்றி வழிபடக்கூடிய அற்புதமான காலக்கட்டமாகும். அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நவராத்திரி பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நவராத்தியின்போது கொண்டாடப்படும் தெய்வீக பெண் ஆற்றலைப் போற்றும் வகையில் துர்கா தேவிக்கு சிறப்பு கர்பா பாடலை எழுதி பிரதமர் நரேந்திர மோடி எழுதி சமர்பித்துள்ளார்.

Navrathiri: அப்படிப்போடு.. நவராத்திரி பண்டிகைக்கு பாடல் எழுதிய பிரதமர் மோடி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 07 Oct 2024 20:38 PM

பிரதமர் மோடி: நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி நவராத்திரி பண்டிகைக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க அம்மனை போற்றி வழிபடக்கூடிய அற்புதமான காலக்கட்டமாகும். அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நவராத்திரி பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நவராத்தியின்போது கொண்டாடப்படும் தெய்வீக பெண் ஆற்றலைப் போற்றும் வகையில் துர்கா தேவிக்கு சிறப்பு கர்பா பாடலை எழுதி பிரதமர் நரேந்திர மோடி எழுதி சமர்பித்துள்ளார் . “ஆவடி காலாய்” என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த கர்பா பாடல், துர்கா தேவியின் சக்தி மற்றும் அருளைப் பிரதிபலிக்ககூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பண்டிகையை வரவேற்கும் பக்தி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வோடு எதிரொலிக்கும் என பாடலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி   தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில், “இது நவராத்திரியின் புனிதமான நேரம். மக்கள் துர்கா தேவியின் பக்தியால் ஒன்றுபட்ட விதத்தில் வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். இந்த  பக்தி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வாக துர்கா தேவியின் சக்தி மற்றும் கருணையைப் போற்றும் வகையில் நான் எழுதிய ஆவடி காவலாய் என்ற கர்பா பாடலை வெளியிட்டுகிறேன். துர்காவுடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மீது இருக்கட்டும்.
இந்த கர்பா பாடலுக்கு இசையமைத்து  குரல் கொடுத்த வளர்ந்து வரும் திறமைசாலியான பூர்வ மந்திரிக்கும் பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Blood Donation: இரத்த தானம் செய்வதில் இவ்வளவு நன்மைகளா..? புதிய இரத்தம் உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..?

தமிழ்நாட்டில் நவராத்திரி திருவிழா

தமிழ்நாட்டின் நவராத்திரி திருவிழா என்பது மிகப் பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்றாலே நம் அனைவருக்கும் கொலு கண்காட்சிதான் நினைவுக்கு வரும். துர்க்கை அம்மன், சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவி ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து மகிசாசுரனை வதம் செய்ய தவம் இருந்த காலகட்டம் தான் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் நடைபெறும் தசரா திருவிழா தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கும் முத்தாரம்மன் ஆலயத்தில் நடைபெறும் தசரா திருவிழா உலக புகழ்பெற்றதாக திகழ்கிறது.

Also Read: Dehydration Symptoms: உடலில் நீர் பற்றாக்குறை உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது..? இப்படி வீட்டிலேயே சோதித்து பாருங்கள்..!

9 நாட்களும் புதுமையான முறையில் அம்மனை வழிபடுவது தான் இந்த நவராத்திரியின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், நடுவில் இருக்கும் 3 நாட்கள் லட்சுமிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி முடிவில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களும் வீட்டில் கொலு வைப்பவர்கள் விரதம் இருந்து அனைவரையும் இல்லத்துக்கு அழைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் மஹாலய அமாவாசைக்கு அடுத்த நாள் வளர்பிறை பிரதமை தொடங்கி தசமி வரை நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி எழுதியுள்ள பாடல் பாஜக தொண்டர்களிடையே மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News