Narendra Modi : ஒருமனதாக தேர்வான நரேந்திர மோடி.. 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு என தகவல் - Tamil News | | TV9 Tamil

Narendra Modi : ஒருமனதாக தேர்வான நரேந்திர மோடி.. 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு என தகவல்

Published: 

06 Jun 2024 08:55 AM

PM Modi : 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேற்றே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இந்நிலையில் நாளை குடியரசுத்தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதன்படி ஜூன்8ம் தேதி பதவியேற்பு இருக்கும் என தெரிகிறது.

Narendra Modi : ஒருமனதாக தேர்வான நரேந்திர மோடி.. 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு என தகவல்

பிரதமர் மோடி

Follow Us On

நரேந்திர மோடி : உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவது ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவின் பெருந்தலைகள் கூறி வந்த நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அவர்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. தெலுங்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

அதன்படி நேற்று 8டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தின் முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் தங்களது ஆதரவை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். இதன் மூலம் 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேற்றே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இந்நிலையில் நாளை குடியரசுத்தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதன்படி ஜூன்8ம் தேதி பதவியேற்பு இருக்கும் என தெரிகிறது.

Also Read : சபாநாயகர் பதவிக்கு போட்டா போட்டி.. விழிபிதுங்கும் பாஜக!

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடர்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சாதனையை பிரதமர் மோடி சமன் செய்ய உள்ளார்.

நீண்ட கால பிரதமர்களின் லிஸ்ட்:

இந்த நிலையில், இந்தியாவில் நீண்ட கால பிரதமர்கள் யார் என்ற பட்டியலை அலசி பார்ப்போம். நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள் அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அதாவது, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், இவருக்கு அடுத்த படியாக அவரது மகள் இந்திரா காந்தி 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியை அலங்கரித்தார். அதாவது, 11 ஆண்டுகள் 59 நாட்கள் பிரதமராக இருந்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக நரேந்திர மோடி அடைந்துள்ளார். 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மீண்டும பிரதமராக பொறுப்பேற்றார். தற்போதைய நிலவரப்படி, நரேந்திர மோடி 10 ஆண்டுகள் 8 நாட்களுக்கு மேல் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version