PM Modi: 50 ஆண்டுகளுக்கு பின் கயானா செல்லும் இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?
பிரதமர் மோடியின் நைஜீரியா பயணம் பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை. முன்னதாக 2007 அக்டோபரில் மன்மோகன் சிங் நைஜீரியா சென்றிருந்தார். கயானாவில் நடைபெறும் CARICOM - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணம் இன்று முதல் தொடங்குகிறது. பிரதமர் மோடி முதலில் நைஜீரியா செல்கிறார். அதனை தொடர்ந்து பிரேசில் செல்கிறார் பின்னர் கயானாவுக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடி நவம்பர் 16-17 ஆகிய தேதிகளில் நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நைஜீரியாவைத் தொடர்ந்து பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். இதையடுத்து பிரதமர் மோடி கயானா செல்கிறார். பிரதமர் மோடியின் நைஜீரியா பயணம் பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை. முன்னதாக 2007 அக்டோபரில் மன்மோகன் சிங் நைஜீரியா சென்றிருந்தார். கயானாவில் நடைபெறும் CARICOM – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
An action packed visit begins!
PM @narendramodi emplanes on a 3 nation visit to Nigeria, Brazil and Guyana.
On the first leg of his visit, PM will be visiting Nigeria, which is the first visit by an Indian PM to 🇳🇬 in 17 years. In Brazil, PM will be participating in the G20… pic.twitter.com/MdE4jbsemU
— Randhir Jaiswal (@MEAIndia) November 16, 2024
நைஜீரியா சென்ற பிரதமர் மோடி:
- நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நைஜீரியா இந்தியாவின் நெருங்கிய பங்காளியாக உள்ளது. எனது பயணம் நமது மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டாண்மை ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தில் பகிரப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியில் எனக்கு அன்பான வரவேற்பு செய்திகளை அனுப்பிய நைஜீரியாவின் இந்திய சமூகம் மற்றும் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- அதே நேரத்தில் பிரேசிலில் நடைபெறும் 19வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. அதே நேரத்தில், இந்த முறை பிரேசில் நடைபெறுகிறது. ஜி-20 மாநாட்டின் போது பிரதமர் மோடி பல தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
- கயானா அதிபர் முகமது இர்பானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி செல்கிறார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பகிரப்பட்ட பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலான நமது தனித்துவமான உறவுக்கு மூலோபாய திசையை வழங்குவது குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 185 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த மூத்த இந்தியக் குடியேற்றவாசிகளில் ஒருவருக்கும் எனது மரியாதையை செலுத்துவேன் என்றும், இந்த பயணத்தின் போது, இரண்டாவது இந்தியா – காரிகாம் உச்சிமாநாட்டில் கரீபியன் கூட்டாளி நாடுகளின் தலைவர்களுடன் நானும் இணைவேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.