5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகள்.. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் கொடுப்பாரா மோடி?

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்ற உள்ளார். மக்களவையில் இன்று மாலை சுமார் 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிநறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதலளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகள்.. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் கொடுப்பாரா மோடி?
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jul 2024 08:05 AM

பிரதமர் மோடி இன்று உரை: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி முதல் முறையாக நேற்று உரையாற்றினார். அவரது 40 நிமிட பேச்சில் அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பியதால் அவையில் அனல் பறந்தது. நீட் தேர்வு, அக்னிபாத் திட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவைகள் குறித்து  ராகுல் காந்தி பேசினார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்ற உள்ளார். மக்களவையில் இன்று மாலை சுமார் 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிநறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதலளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, இன்று காலை 9.30 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். மூன்றவாது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், ஆளும் கட்சியின் எம்.பிக்களிடம் அவர் நடத்தும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி வைத்து குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ”நல்ல ஸ்டாண்ட் அப் காமெடி” ராகுல் காந்தி பேச்சு குறித்து கங்கனா ரணாவத் விமர்சனம்!

2014, 2019ஆம் ஆண்டுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில், தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில், மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் மோடி பேச இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தி பேசியது என்ன?

மக்களவையில் நேற்று பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நான் உணர்கிறேன் . எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் நிதர்சனமான உண்மை. பயத்தை எதிர்கொள்வதும் ஒருபோதும் பயப்படக்கூடாது என்ற எண்ணமும் சிவனிடம் இருந்து வருகிறது. சிவன் தனது கழுத்தில் இருந்து ஒரு அங்குலத்தில் மரணத்தை வைத்திருக்கிறார்.

உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு பிரதிபலிக்கிறது. ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்பதை குறிக்கிறது. அந்த உணர்வோடுதான் நாங்கள் போராடினோம். ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே அல்ல. பாஜகவுடன் போரிட்டபோது கூட, ​​நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. நாங்கள் உண்மையைப் பாதுகாத்தபோது கூட ​​எங்களிடம் ஒரு துளி வன்முறை வெளிப்படவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ராணுவ வீரர்களிடையே அக்னிவீர் திட்டம் பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது. அக்னிவீரர்கள் போரில் உயிர் இழந்தால் அவர்களுக்கு தியாகி என்ற அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பணமதிப்பு நீக்கம் போல, அக்னிவீர் திட்டமும் பிரதமர் அலுவலகத்தால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டது” என்றார்.

Also Read: 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன எதிர்ப்பார்க்கலாம்?