புனே கார் விபத்து: சிறுவனுக்கு பீட்சா, பர்கர் வழங்கிய போலீஸ்.. அடுத்த சர்ச்சை
Pune Porsche Crash: விபத்தில் உயிரிழந்த 24 வயதான மென்பொருள் வல்லுநர்களான அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா ஆகியோரின் உறவு முறை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இரு பெண்களும் என்ன உறவு முறையில் இருந்துள்ளனர்? என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
புனே கார் விபத்து விசாரணை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஞாயிற்றுக்கிழமை (மே 19, 2024) அதிகாலை குடித்துவிட்டு தனது தந்தையின் ₹2.5 கோடி மதிப்புள்ள போர்ஷே சூப்பர் காரை ஓட்டிச் சென்ற இளைஞரின் கார் மோதி 2 இளம் டெக்கிகள் (தொழில்நுட்ப வல்லுநர்கள்) பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் 17 வயது இளைஞருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது, நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “17 வயது சிறுவன் 18 வயதை எட்டும் நிலையில் உள்ளார். ஆகவே அவரை வயது வந்தவராக கருத வேண்டும்” என்றார். மேலும் இந்த விவகாரத்தை ராகுல் காந்தியும் விமர்சித்து உள்ளார்.
டெக்கிகளின் உறவு முறை குறித்து விசாரணை
இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவன் மேலிடத்தை சேர்ந்தவன் என்பதால் அவர் சாப்பிட பீட்சா, பர்கர் வேண்டுமா எனக் கேட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த 24 வயதான மென்பொருள் வல்லுநர்களான அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா ஆகியோரின் உறவு முறை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இரு பெண்களும் என்ன உறவு முறையில் இருந்துள்ளனர்? என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
Officers at Yerawada police station spent more time questioning the relationship between Anish and Ashwini — the two IT professionals who were fatally knocked down by the drunk minor — while the accused was allegedly served burger and pizza.
This is how the system benefits the…
— Prakash Ambedkar (@Prksh_Ambedkar) May 22, 2024
இந்த விவகாரத்தை பிரகாஷ் அம்பேத்கர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ராகுல் காந்தி, “விபத்தில் பணக்காரர் ஒருவரை கொன்றால் கதை எழுதுகிறார்கள்; ஆனால் பேருந்து லாரி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இவ்வாறு எழுத சொல்லவில்லை” என்றார்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த மறுநாள் சம்பாஜிநகரில் (அவுரங்காபாத்) கைது செய்யப்பட்ட சிறுவனின் தந்தையின் மொபைல் ஃபோனையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக வழக்கு விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விபத்துக்கு முந்தைய இரவு, உணவகத்தில் பாரட்டி ஒன்று நடந்துள்ளது. இந்தப் பார்ட்டியில் தந்தையை மகனுக்கு மது கொடுத்துள்ளார். அதன் பின்னர் விடிய விடிய விருந்து நடந்துள்ளது.
சிறுவனுக்கு பீட்சா, பர்கர் சப்ளை
இந்த நிலையில், சிறுவன் காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், காரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவானது கிடையாது. இந்தக் கார் பெங்களூருவில் தற்காலிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ந்து, இந்த வழக்கில் சிறுவனின் தந்தையும், உணவக ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், உயிரிழந்த இரு தொழில்நுட்ப நிபுணர்களின் (டெக்கி) உறவுமுறை தொடர்பான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், காவல் நிலையத்தில் சிறுவனுக்கு பீட்சா, பர்கர் பரிமாறப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது.
இதையும் படிங்க : திடீரென வெடித்து சிதறிய பாய்லர்.. அலறிய தொழிலாளர்கள்.. 4 பேர் பலியான சோகம்!