5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காவல்துறை வாகனத்தை முந்திய நபர்.. நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்!

Police Attacked | மத்திய பிரதேச மாநிலம் கஜூரஹோ நகரைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். அதே சமயம் இவர் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி பணி முடித்துவிட்டி இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சாலையில் சென்ற காவல்துறை மற்றும் மின்சார துறையினரின் வாகனங்களை முந்தி சென்றதாக கூறப்படுகிறது. 

காவல்துறை வாகனத்தை முந்திய நபர்.. நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 25 Jul 2024 09:49 AM

சித்ரவதைக்குள்ளான பட்டியலினத்தவர் : இந்தியாவில் என்ன தான் பல சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் இருந்தாலும் சாதி ரீதியான பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமலே உள்ளது. சாதி மக்களின் மனங்களோடு இருக்கமாக பிணைந்துள்ளது. இந்த தீவிர சாதிய உணர்வு சக மனிதர்களை வார்த்தையால் காயப்படுத்துவது, தாக்குவது சில சமயங்களில் கொலை வரை இழுத்துக்கொண்டு செல்கிறது. அத்தகைய ஒரு கசப்பான சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த  காவல்துறை வாகனத்தை முந்தி சென்ற பட்டியலின நபர் காவல்துறையினரால் சித்தரவதைக்குள்ளான கொடூர சம்பவம் தான் அது.

பட்டியிலன இளைஞருக்கு நடந்தது என்ன?

மத்திய பிரதேச மாநிலம் கஜூரஹோ நகரைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். அதே சமயம் இவர் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி பணி முடித்துவிட்டி இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சாலையில் சென்ற காவல்துறை மற்றும் மின்சார துறையினரின் வாகனங்களை முந்தி சென்றதாக கூறப்படுகிறது.

நிர்வாணப்படுத்தி தாக்கிய காவலர்கள்

இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி, சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டி தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் நின்றுவிடாமல் காவல் நிலையத்தில் வைத்து அவரை நிரவாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்த வால்மீகியின் சகோதரர் அவரை மீட்டு, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : Flight Accident : நேபாள விமான விபத்து.. விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பயணிகள் பலி!

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை கண்காணிப்பாளர்

இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அகம் ஜெயின், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட காவலர்களின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களை காவல் நிலையத்தை விட்டு நீக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு.. விசாரணையை தீவிரப்படுத்தும் குற்றப்பிரிவு போலீசார்..

சாலையில் முந்தி சென்றதற்காக பட்டியலின இளைஞர் நிர்வாணப்ப்படுத்தி, அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News