Priyanka Gandhi: முதல் தேர்தலே வெற்றி.. எம்.பியாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரெஹான் மற்றும் மகள் மிராயா வத்ரா ஆகியோரும் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். பிரியங்கா தனது தாய் சோனியா காந்தியுடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். அம்மா சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராபர்ட்டின் தாய், இரு குழந்தைகள், மல்லிகார்ஜுன் கார்கே, ரஞ்சித் ரஞ்சன் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் எம்.பி கேலரியில் அமர்ந்திருந்தனர்.

Priyanka Gandhi: முதல் தேர்தலே வெற்றி.. எம்.பியாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..

பிரியங்கா காந்தி

Published: 

28 Nov 2024 12:32 PM

மக்களவைக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா காந்தி வத்ரா இன்று எம்பியாக பதவியேற்றார். இந்த நிலையில் பிரியங்காவின் குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தனர். அம்மா சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் தவிர, கணவர் ராபர்ட், அவரது மகன் ரெஹான் வத்ரா மற்றும் மகள் மிராயா வத்ரா ஆகியோரும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தனர். க்ரீம் கலர் புடவை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தை அடைந்த பிரியங்கா காந்தி, காலை 11 மணிக்கு மக்களவை நடவடிக்கைகள் தொடங்கிய பின்னர் எம்பியாக பதவியேற்றார். பதவியேற்பு விழாவின் போது, ​​பிரியங்கா தனது கையில் அரசியலமைப்பு நகலை வைத்திருந்தார். ஹிந்தி மொழியில் பதவியேற்றார்.

பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வரிசை:

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரெஹான் மற்றும் மகள் மிராயா வத்ரா ஆகியோரும் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். பிரியங்கா தனது தாய் சோனியா காந்தியுடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். அம்மா சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராபர்ட்டின் தாய், இரு குழந்தைகள், மல்லிகார்ஜுன் கார்கே, ரஞ்சித் ரஞ்சன் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் எம்.பி கேலரியில் அமர்ந்திருந்தனர்.

பதவியேற்ற பிறகு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவையும் பிரியங்கா கைகூப்பி வரவேற்றார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர்களை பிரியங்கா கைகூப்பி வரவேற்றார். சபையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரது சகோதரர் ராகுல் காந்தியும் அவரது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டனர்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரியங்கா, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான நான்காவது வரிசை இருக்கைக்கு சென்று அமர்ந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலசலப்புடன் தொடங்கிய பயணம்:

ஆனால், பிரியங்கா காந்தியின் நாடாளுமன்றப் பயணம் சலசலப்புடன் தொடங்கியது. பதவிப் பிரமாணம் முடிந்து அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியை கண்டு சபாநாயகர் அவையை 12 மணிக்கு ஒத்திவைத்தார்.

Also Read: மேலே ஏறும் Swiggy பங்குகள்.. ரூ.500ஐ கடந்து விலை.. திடீர் உயர்வு ஏன் தெரியுமா?

முன்னதாக, லோக்சபாவிற்குள் பிரியங்கா நுழைந்தவுடன், அவரை காங்கிரஸ் எம்.பி.க்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கத் தொடங்கினர். இதனிடையே மிசா பார்தி, தீபேந்தர் ஹூடா, சசி தரூர் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் அவரை சந்தித்தனர். பதவியேற்பு விழா முடிந்ததும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரை வாணங்கிய பிரியங்கா, கேலரியில் அமர்ந்திருந்த சோனியா காந்தி மற்றும் அவரது மாமியார் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய பிரியங்கா காந்தி:

பிரியங்கா காந்தி முதல் முறையாக வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டார். கடந்த வாரம் முடிவடைந்த கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரது சகோதரர் ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார்.

பிரியங்காவைத் தவிர, மகாராஷ்டிராவின் நான்டெட் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ரவீந்திர பசந்தராவ் சவானும் இன்று அவையின் உறுப்பினராகப் பதவியேற்றார். சவான் மராத்தி மொழியில் பதவியேற்றார்.

Also Read: இது புதுசா இருக்கே.. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது உற்சாக நடனமாடிய பெண்!

நாட்டின் வரலாற்றில் காந்தி – நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பார்லிமென்டில் காணப்படுவது இதுவே முதல் முறையாகும். பிரியங்கா காந்தியின் சகோதரர் ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகவும், அவரது தாயார் சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். அந்த வரிசையில் தற்போது பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார்.

பிரியங்கா காந்தி 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019 லோக்சபா தேர்தலின் போது தீவிர அரசியலில் நுழைந்தார், ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அதன் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?