Priyanka Gandhi Wayanad: வயநாடு தொகுதியில் களம் இறங்குகிறாரா பிரியங்கா காந்தி? தேசிய அரசியலில் ட்விஸ்ட்!
அரசியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. எனவே, அரசியில் ரீதியாக பார்த்தால் ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்க வைப்பார் என கூறப்படுகிறது. அதாவது, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ராஜினாமா செய்யம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த இடைத்தேர்தலில் தங்கை பிரியங்கா காந்தியை களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு VS ரேபரேலி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டையும் கைப்பற்றினார். ரேபரேலி தொகுதியில் 6.87 லட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட சுமார் 2.97 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அதேபோல, வயநாடு தொகுதியில் 6.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மூத்த இடதுசாரி தலைவர் ஆனிராஜவை தோற்கடித்தார் ராகுல் காந்தி. அரசியலைப்பின்படி, ஒருவரால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் எம்.பியாக இருக்க முடியாது. எனவே, எதாவது ஒரு தொகுதியில் எம்.பி.பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி உள்ளது. எந்த தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார் என்பது தான் கேள்வியாக எழுந்துள்ளது.
Also Read: குவைத் தீ விபத்து.. 7 தமிழர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு.. விசாரணை தீவிரம்
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி?
2019 தேர்தலில் நாடு முழுக்க காங்கிரஸ் தோல்வியை சந்தித்தபோதும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதி தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றியது. அந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இந்த சூழலில் தான் வயநாடு தொகுதிதான் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. எனவே தான் 2வது முறையாக வயநாட்டில் களமிறங்கினார். அதேபோல, இந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு விருப்பமில்லை என்றாலும், சோனியா காந்தி, கார்கே ஆகியோரிடம் அறிவுறுத்தலின்பேரில் ரேபரேலியில் போட்டியிட்டார்.
அரசியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. எனவே, அரசியில் ரீதியாக பார்த்தால் ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்க வைப்பார் என கூறப்படுகிறது. அதாவது, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ராஜினாமா செய்யம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த இடைத்தேர்தலில் தங்கை பிரியங்கா காந்தியை களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: ஜி7 நாடுகள் மாநாடு.. இன்று இத்தாலி செல்லும் பிரதமர் மோடி