40 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடம் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. காரணங்களை அடுக்கிய மருத்துவர்கள்..!
டெல்லியை சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 20 சதவீத புற்றுநோய்கள் இப்போது 40 வயதுக்குட்பட்டவர்களிடம் கண்டறியப்படுகின்றன. இந்த இளம் புற்றுநோயாளிகளில் 60 சதவிகிதம் ஆண்கள் என்றும், மீதமுள்ள 40 சதவிகிதம் பெண்கள் என்றும் ஆய்வு காட்டுகிறது. இந்தியாவில் ஆண்களிடையே அதிக புகையிலை பயன்பாடு, தொழில் சார்ந்த வெளிப்பாடு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவற்றின் காரணமாக பாலின வேறுபாடுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியர்களிடையே ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு: இந்தியாவில் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோய் பாதிப்புகளை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இளம் வயதினரிடையே புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. முதன்மைக் காரணங்களில் ஒன்று பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகையிலை மற்றும் குடி பழக்கம், வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் என தெரிவிக்கின்றனர். இவை தவிர சூற்றுச்சூழல் மாசுபாடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நகரங்கள் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பல வகை புற்றுநோய் உண்டாக்க காரணமாக உள்ளது. காற்று மற்றும் நீர் மாசுபாடு தனிநபர்களை புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜெனிக் பொருட்களை வெளிப்படுத்துகிறது, இதுபுற்றுநோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்து வருகின்றனர். உடல் பயிற்சியே இல்லாத அளவுக்கு நம்முடைய வேலை நம் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இதனால் நாம் சாப்பிடும் உணவு கூட எளிமையாக நமக்கு கிடைக்கிறதா என்பதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து நாம் வாழும் வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நாம் முன்னேறி இருந்தாலும், வாழ்க்கைமுறையில் நாம் பின்னோக்கி தான் இருக்கிறோம்.
இது தொடர்பாக, ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹெமாட்டாலஜி மற்றும் பிஎம்டி துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ராகுல் பார்கவா கூறுகையில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் பயிற்சி சற்றும் இல்லாத சூழல். இவை இரண்டும் இணைந்து உடல் நலத்தை மிக மோசமாக பாதிக்கிறது என்றும் இந்த ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களையும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளையின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 20 சதவீத புற்றுநோய்கள் இப்போது 40 வயதுக்குட்பட்டவர்களிடம் கண்டறியப்படுகின்றன. இந்த இளம் புற்றுநோயாளிகளில் 60 சதவிகிதம் ஆண்கள் என்றும், மீதமுள்ள 40 சதவிகிதம் பெண்கள் என்றும் ஆய்வு காட்டுகிறது. இந்தியாவில் ஆண்களிடையே அதிக புகையிலை பயன்பாடு, தொழில் சார்ந்த வெளிப்பாடு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவற்றின் காரணமாக பாலின வேறுபாடுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
யுனிக் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளரும் மூத்த புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், நம் நாட்டில், அதிகரித்து வரும் உடல் பருமன், உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம், குறிப்பாக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவின் நுகர்வு அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை அதிக புற்றுநோய் விகிதங்களுடன் தொடர்புடையவை என குறுப்பிட்டுள்ளார்.
Also Read: நீட்.. நீட்.. பதவியேற்க வந்த கல்வித்துறை அமைச்சர்… கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்!