ISRO : கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்னை.. தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்.. இஸ்ரோவில் பரபரப்பு சம்பவம்!

Proba - 3 | இஸ்ரோ நிறுவனம் வானியல் ஆராய்சிகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரோ தனது நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் செயற்கை கோள்களை வணிக ரீதியாக ஒப்பந்தத்தின் பெயரில் விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

ISRO : கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்னை.. தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்.. இஸ்ரோவில் பரபரப்பு சம்பவம்!

ப்ரோபா-3

Published: 

04 Dec 2024 18:17 PM

இஸ்ரோ நிறுவனம் வானியல் ஆராய்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவ்வப்போது சில செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று (04.12.2024) விண்ணில் செலுத்த தயாராக இருந்த செயற்கைகோள் ஒன்றில் கடைசி நேரத்தில் பிரச்னை கண்டறியப்பட்டதால், செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் இருந்த பிரச்னை கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட நிலையில், பெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இஸ்ரோ இன்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில், இந்த செயற்கைக்கோளை நாளை (05.12.2024) விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், செயற்கைகோளில் ஏற்பட்ட பிரச்னை என்ன, அது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Kerala : திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் காரில் வைத்து மனைவியை எரித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

விண்ணில் ஏவ தயாராக இருந்த ப்ரோபா-3 செயற்கைக்கோள்

இஸ்ரோ நிறுவனம் வானியல் ஆராய்சிகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரோ தனது நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் செயற்கை கோள்களை வணிக ரீதியாக ஒப்பந்தத்தின் பெயரில் விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ESV-ன் ப்ரோபா -3 செயற்கைக்கோளை தான் இன்று விண்ணில் செலுத்துவதாக இருந்தது. இது ஒரு இரட்டை செயற்கைக்கோள் ஆகும். இதில் சுமார் 550 எடை கொண்ட 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்த செயற்கைக்கோள் இஸ்ரோ மூலம் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Don Bradman Cap: டான் பிராட்மேனின் பழைய பேகி தொப்பி.. பத்து நிமிடத்தில் ரூ.2.63 கோடிக்கு ஏலம்..!

கடந்த மாதமே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட செயற்கைக்கோள்

இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்துவதற்காக இருந்த இந்த செயற்கைக்கோள் கடந்த மாதமே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதல்முறையாக இரட்டை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோ தயாராகி வந்தது. அதன்படி, செய்றகைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவுபெற்று இன்று மாலை சரியாக 04.08 மணிக்கு விண்ணில் ஏவுவதற்காக தயார் நிலையில் இருந்தது. இந்த இரட்டை செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக நேற்று (03.12.2024) மாலை சரியாக 03.08 மணிக்கு 25 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. இந்த கவுன்டவுன் சரியாக இன்று மாலை 04.08 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.

இதையும் படிங்க : Tiruchendur | திருச்செந்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள்.. அதில் இருக்கும் தகவல்கள் கூறுவது என்ன?

விண்ணில் ஏவுவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு

செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்கு தயாராக இருந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக அதில் தொழிநுட்ப கோளாறு இருப்பது கண்டியறிப்பட்டுள்ளது. இதனால், உடனடியாக செயற்கைக்கோளை ஏவும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று விண்ணில் செலுத்துவதற்காக தயாராக இருந்த ப்ரோபா -3 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. அதாவது நாளை (05.12.2024) மாலை சரியாக 4.12 மணிக்கு இந்த ப்ரோபா -3 இரட்டை செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைக்கோளில் ஏற்பட்ட இந்த திடீர் கோளாறு காரணமாக இஸ்ரோ சிறிது நேரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?