EB Rate: மின் கட்டணம் உயர்வு… புதுச்சேரியில் அமலுக்கு வந்தது… புது அறிவிப்பு!

புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.75 ஆக உயர்த்த புதுச்சேரி அரசு கோரியது. அதை ரூ.2.70 ஆக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25 இருந்து ரூ.4 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40ல் இருந்து ரூ.6 ஆகவும் 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ.6.80ல் இருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

EB Rate: மின் கட்டணம் உயர்வு... புதுச்சேரியில் அமலுக்கு வந்தது... புது அறிவிப்பு!

மின் கட்டணம்

Updated On: 

16 Jun 2024 13:05 PM

மின் கட்டணம் உயர்வு: புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு  வந்தது. புதுச்சேரி மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-24ஆம் நிதியாண்டுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க அப்போதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து, மின்கட்டண உயர்வு தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்திருந்தது.

Also Read: பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு.. ஷாக் கொடுத்த கர்நாடக அரசு!

எவ்வளவு?

இந்த நிலையில், இன்று முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.75 ஆக உயர்த்த புதுச்சேரி அரசு கோரியது. அதை ரூ.2.70 ஆக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25 இருந்து ரூ.4 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40ல் இருந்து ரூ.6 ஆகவும் 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ.6.80ல் இருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.6ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை ரூ.7.05ல் இருந்து ரூ.8 ஆகவும், 252 யூனிட்டுக்கு மேல் ரூ.7.80ல் இருந்து ரூ.8 ஆகவும், 251 யூனிட்டுக்கு மேல் ரூ.7.80ல் இருந்து ரூ.9 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த மாதமே அமலுக்கு வர வேண்டியது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கட்டண உயர்வு அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில், இன்று புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

முன்னதாக, கர்நாடக அரசு சனிக்கிழமை (ஜூன் 15) மாநிலத்தில் எரிபொருள் விலையை ரூ.3 உயர்த்தியது. புதிய விலைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மாநில அரசின் அறிவிப்பின்படி, கர்நாடக விற்பனை வரி (KST) பெட்ரோல் மீதான 25.92% லிருந்து 29.84% ஆகவும், டீசல் மீதான 14.3% லிருந்து 18.4% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது பெட்ரோலின் விலை ரூ.3 அதிகரித்து, பெங்களூரு விலை லிட்டருக்கு ரூ.99.84 ஆக இருந்து ரூ.102.84 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை ரூ.3.02 அதிகரித்து, லிட்டருக்கு ரூ.85.93ல் இருந்து ரூ.88.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவின் நிதித்துறையின் இந்த முடிவு, மாநிலத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகம் உட்பட பல்வேறு துறைகளில் விளைவை ஏற்படுத்தக்கூடும், இது நுகர்வோருக்கு செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உத்தரகாண்டில் கோர விபத்து.. வேன் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த சோகம்!

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?