School Leave: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலி..
புதுச்சேரியில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி உள்ளிட்ட புதுச்சேரியில் அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்தியக் கூட்டணி கட்சி சார்பில், முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16 ஆம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மின் கட்டண உயர்வ்வு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்தியக் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி புதுச்சேரியில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி உள்ளிட்ட புதுச்சேரியில் அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பேருந்து, ஆட்டோ, டெம்போக்கள் ஓடாததால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் தங்களது இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ஆயிரம் விளக்கு முதல் திருமங்கலம் வரை.. சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின் தடை..
தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் குறைந்த அளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கபட்டது. மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளுக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாத வீடே இல்லை என சொல்லலாம். புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அன்மை காலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது பல தரப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அறநிலையத்துறையில் வேலை.. 8ஆம் தேதி தேர்ச்சி போதும்.. உடனே செக் பண்ணுங்க!
மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே மின் கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை எண்.6/2024 -ஐ வெளியிட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.