5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“ஆர். ஆர். ஆர்”. தெலுங்கு படத்துடன் ஒப்பிட்டு, தெலங்கானா முதல்வரை விமர்சித்த பிரதமர் மோடி..!

"ஆர் ஆர் ஆர்" (RRR) என்ற பிரபலமான தெலுங்கு சினிமா படத்துடன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை (ஆர் ஆர்) ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் தொடுத்தார்.

“ஆர். ஆர். ஆர்”. தெலுங்கு படத்துடன் ஒப்பிட்டு, தெலங்கானா முதல்வரை விமர்சித்த பிரதமர் மோடி..!
intern
Tamil TV9 | Updated On: 28 Nov 2024 11:19 AM

தெலங்கானா மாநிலம் ஜாகிராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

“உங்களின் அன்பும் ஆதரவும் மிகவும் வலிமையானது. அது “ஆர் ஆ”ர்க்கு தூக்கம் இல்லாத இரவுகளை கொடுக்கும் (இந்த சமயத்தில் பொதுமக்கள் மோடி மோடி என்று உரத்த குரலில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்).

தெலுங்கு திரையுலகம் இந்தியாவிற்கு ஆர் ஆர் ஆர் போன்ற வெற்றிகரமான பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளது. ஆனால் இன்று தெலங்கானா காங்கிரஸ் ஆர் ஆர் வரியால் மாநில மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ளது.

ஆர் ஆர் ஆர் திரைப்படம் இந்தியாவின் பெயரை உலக அளவில் முன்னணியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த ஆர் ஆர் வரி இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் இந்த ஆர் ஆர் வரி பற்றி பரவலான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆர் ஆர் வரியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை டெல்லிக்கு செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஆர் ஆர் வரியால் நீங்கள் அனைவரும் சிரமப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

Also Read: https://www.tamiltv9.com/india/loksabha-election-no-religious-based-reservation-to-muslim-till-i-am-alive-says-pm-modi-2042914.html

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பரம்பரை வரி விதிக்கப்படும். காங்கிரஸ் கட்சி உங்களை கொள்ளை அடிக்க ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது அதுதான் பரம்பரை வரி. அவர்களின் ஆட்சியில் உங்கள் வாழ்நாள் சம்பாதிப்பின் 55 சதவீதம் உங்கள் பிள்ளைகளுக்கு செல்லாது; அவர்களின் வாக்கு வங்கி ஆதரவாளர்களுக்கு செல்லாது; அவர்களின் ஆபத்தான நோக்கங்கள் பற்றி ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி இந்த மாநிலத்தை கொள்ளை அடித்து வந்தது. காங்கிரசும் பிஆர்எஸ் கட்சியும் ஒரே ஊழல் நாணயத்தின் இரு பக்கங்கள். இது டெல்லி மதுபான ஊழல் விவகாரத்தில் தெளிவாக தெரிந்தது.

இந்த ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்த ஊழல் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ஒன்று கூடினர் ஒருவருக்கொருவர் தங்கள் ஆதரவுகளை தெரிவித்துக் கொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் ஆபத்தில் இருப்பது மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் வாக்கு வங்கி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது காங்கிரஸ் பிந்தியதை முதன்மைப்படுத்துகிறது.

மாறாக, பாஜக எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்கு முன்னுரிமை அளிக்கிறது”.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டமன்றத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் 64 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது நினைவு கூரத்தக்கது

Latest News