5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Gandhi : உ.பி.யின் சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா.. தடுத்து நிறுத்திய போலீஸ்!

Sambhal Issue | உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் நகர் என்னும் இடத்தின் மையப்பகுதியில் ஷாஹி ஜாமா மசூதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஹரிஹர கோயில் இருந்ததாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது மசூதியை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தர பிறப்பித்திருந்த நிலையில், கடந்த கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மசூதியில் ஆய்வு பணிகள் நடைபெற்றது.

Rahul Gandhi : உ.பி.யின் சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா.. தடுத்து நிறுத்திய போலீஸ்!
தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி!
vinalin
Vinalin Sweety | Published: 04 Dec 2024 15:13 PM

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சென்ற மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும் வயநாடு தொகுதியின் எம்.பியும் ஆன பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறை, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சம்பல் பகுதியின் எல்லையிலே தடுத்த நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளது. சம்பல் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில், வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ராகுல் காந்தி காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், காவல்துறையினர் ராகுல் மற்றும் பிரியங்காவை சம்பல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, ராகுல் மற்றும் பிரியங்கா சென்ற வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்பல் வன்முறையின் பின்னணி என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் நகர் என்னும் இடத்தின் மையப்பகுதியில் ஷாஹி ஜாமா மசூதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஹரிஹர கோயில் இருந்ததாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது மசூதியை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தர பிறப்பித்திருந்த நிலையில், கடந்த கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மசூதியில் ஆய்வு பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் திடீரென கலவரம் வெடித்தது. இந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டை காவல்துறை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கவலரம் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுவதால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Watch Video: மலைவாழ் மக்களுடன் நடனமாடிய தோனி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்க்க சென்ற ராகுல்

சம்பல் நகர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோர் இன்று (04.12.2024) காலை சம்பல் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அவர்கள் இன்று காலையில் காஜிபூர் சென்றடைந்துள்ளனர். ஆனால், ராகுல் காந்தி மற்றும் அவரது குழுவை சம்பல் நகர் பகுதிக்குள் நுழைய விடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, வாகங்கள் நுழைந்துவிடாமல் இருந்த சாலை தடுப்புகள் அமைக்ப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Telagana Earthquake: தெலங்கானாவில் திடீர் நிலநிடுக்கம்.. பதறிய மக்கள்.. நடந்தது என்ன?

கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர்

சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறையின் காரணமாக, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியுடன் முடைவடைந்த நிலையில், தற்போது தடை உத்தரவு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதில் கும்பல் கூடுவது, தேவையின்றி வெளியே செல்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சம்பல் நகர் பகுதிக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News