ராகுல் காந்தி பையில் என்ன இருந்தது? தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை!
Rahul Gandhi : மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமராவாதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ராகுல் காந்தியின் பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமராவாதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ராகுல் காந்தியின் பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இது தொடர்பான வெளியான வீடியோவில் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து ராகுல் காந்தியின் பையை சோதனையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. நேற்று ஜார்க்கண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காதது பேசும் பொருளாக மாறியது.
ராகுல் காந்தியின் பையில் என்ன இருந்தது?
இந்த நிலையில், இன்று ராகுல் காந்தியின் பையின் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஜார்க்கண்ட மாநிலம் தியோகர் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்வதற்காக புறப்பட்டார்.
அப்போது பிரதமர் டியின் இந்திய விமானப்படை விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காணரமாக பிரதமர் மோடி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
In Amravati LoP Rahul Gandhi’s Bags were checked by Election Commission of India
Many national Bjp leaders are comming in Maharashtra for campaign but rarely they check any one of them pic.twitter.com/trjJOuZkT7— Pritesh Shah (@priteshshah_) November 16, 2024
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்படும் என்று பிரதமர் மோடி காத்திருந்த நிலையில், அந்த பகுதியில் இதர விமானங்கள் பறக்க தடை அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், மாற்று சிறப்பு விமானம் மூலமாக பிரதமர் மோடி தியோகரில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை
அந்த நேரத்தில் கோடாவில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வந்தார். பிரதமர் விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனதால் அந்த பகுதியில் இதர விமானங்கள் செல்ல அனுமதி தரவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தியை அழைத்து செல்வதற்காக வந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் பிரதமர் மோடி சென்ற பிறகே ராகுல் காந்தி ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திட்டமிட்டு ராகுல் காந்தியின் விமானம் புறப்படுவதற்கு தடை செய்யப்பட்டது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியது. இந்த சம்பவம் விவாதத்தை கிளப்பிய நிலையில், இன்று அமராவதியில் ராகுல் காந்தியின் சோதனை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : 50 ஆண்டுகளுக்கு பின் கயானா செல்லும் இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?
பிரதமரை மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கு (பாஜக- முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வர் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்), எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் (காங்கிரஸ் – சிவசேனை உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் மகாராஷ்டிராவில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று அமராவாதியில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி.
Also Read : நெஞ்சை பதற வைக்கிறது – உ.பி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல்..
அதன்படி, ”மோடியின் பேச்சைக் கேட்டதாக என் சகோதரி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த உரையில், நாம் எதைச் சொன்னாலும், மோடியும் இந்த நாட்களில் அதையே கூறுகிறார். எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர் நினைவாற்றலை இழந்திருக்கலாம். அமெரிக்க முன்னாள் அதிபர் மறந்துவிடுவார். அவரை பின்னால் இருந்து நினைவூட்ட வேண்டும். அதேபோல் நமது பிரதமரும் நினைவாற்றலை இழந்து வருகிறார்” என்று கூறியிருந்தார்.