Wayanad Constituency: வயநாடு மக்களே என் தங்கச்சியை பாத்துக்கோங்க.. ராகுல்காந்தி நெகிழ்ச்சி! - Tamil News | rahul gandhi emotional speech in Wayanad Constituency during priyanka gandhi filed her nomination in by election | TV9 Tamil

Wayanad Constituency: வயநாடு மக்களே என் தங்கச்சியை பாத்துக்கோங்க.. ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வயநாடு மக்களவைத் தொகுதியை ராகுல் காந்தி பிரதிநிதித்துவப்படுத்தினார். அதனால் வயநாடு மக்களுடன் எனக்கு உள்ள உறவை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் என கூறினார். என்னை பாதுகாத்தது போன்று என் சகோதரயையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் என ராகுல் தெரிவித்தார். 

Wayanad Constituency: வயநாடு மக்களே என் தங்கச்சியை பாத்துக்கோங்க.. ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

கோப்பு புகைப்படம்

Published: 

23 Oct 2024 19:31 PM

பிரியங்கா காந்தி: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது தொண்டர்களிடையே ராகுல்காந்தி ஆற்றிய உரை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் அவர் வெற்றிப் பெற்றார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார். வயநாடு எம்.பி.யாக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

இதனிடையே தேர்தல் விதிகளின்படி ஒரு நபர் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் வரை அவர் அத்தொகுதியில்  எம்.பியாக செயல்பட்டு வந்தார். கடந்த மாதம் கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது எம்.பி. என்ற முறையில் களம் கண்டு உதவி செய்தார்.

Also Read: Zomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?

இப்படியான நிலையில் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி களம் காண்கிறார். இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டு வந்த அவர் முதல் முறையாக தேர்தலில் களம் இறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் தாயார் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்ய செல்லும் முன் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும்  சாலைகளில் காங்கிரஸ் தொண்டர்களோடு ஊர்வலம் சென்றனர். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரியங்கா காந்தி பேசினார். அதன்பின்னர் ராகுல் காந்தி பேசினார். அதாவது, “நாட்டிலேயே 2 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே தொகுதி வயநாடு தான் என்றும் பிரியங்கா வயநாட்டின் அதிகாரப்பூர்வ எம்பியாகவும், நான் அதிகாரப்பூர்வமற்ற எம்பியாகவும் இரு

மேலும் இருவரும் இணைந்து வயநாடு மக்களை காக்க பாடுபடுவோம் என உறுதியளித்த ராகுல் காந்தி வயநாட்டு மக்கள் தனக்கு தேவைப்படும்போது தன்னை பாதுகாத்து கவனித்துக் கொண்டது போல தனது சகோதரிக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Also Read: Aadhaar Service : இனி தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை.. இந்தியா போஸ்ட் அதிரடி அறிவிப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வயநாடு மக்களவைத் தொகுதியை ராகுல் காந்தி பிரதிநிதித்துவப்படுத்தினார். அதனால் வயநாடு மக்களுடன் எனக்கு உள்ள உறவை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் என கூறினார். என்னை பாதுகாத்தது போன்று என் சகோதரயையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் என ராகுல் தெரிவித்தார்.

பிரியங்கா தனது முழு ஆற்றலையும் வயநாட்டின் பிரச்சினைகளில் வெளிப்படுத்தி மக்களுடன் மக்களாக உங்களை பாதுகாப்பார். மேலும் வயநாட்டில் நான் அதிகாரப்பூர்வமற்ற எம்.பி.,யாக இருந்தாலும் மக்களை சந்திக்கும் பிரச்சினைகளை தலையிட்டு உரிமையோடு தீர்க்கும் முன் வருவேன்.  வயநாடு மக்களை தனது குடும்பமாக பிரியங்கா காந்தி கருதுகிறார் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

நவம்பர் 13ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார். இடதுசாரி ஜனநாயகம் முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
நடிகை அனு இம்மானுவேல் பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!
இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?