வெற்றியை தொடர்ந்து ஹேப்பி நியூஸ்.. ராகுலுக்கு கிடைத்த ஜாமீன்.. என்ன மேட்டர்?
பாஜகவின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்சியுமான கேசவ பிரசாத் சார்பில் 2023ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸின் ராகுல் காந்தி ஆகியோர் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கடந்த 1ஆம் தேதி ஆஜரான சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அன்றைய தினம் ராகுல் காந்தி ஆஜராகததால் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்றைய தினம் அதாவது ஜூன் 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, பாஜகவை காங்கிரஸ் விமர்சித்த விளம்பரம் ஒன்று நாளிதழில் வெளியிடப்பட்டது. அதில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகின. மேலும், முதல்வர் பதவிக்கு கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி நாளிதழில் காங்கிரஸ் சார்பில் விளம்பரமும் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து, பாஜகவின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்சியுமான கேசவ பிரசாத் சார்பில் 2023ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸின் ராகுல் காந்தி ஆகியோர் வழக்கு தொடரப்பட்டது.
Also Read: ரேபரேலி, வயநாடு; இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி: எதை ராஜினாமா செய்வார்? அடுத்து என்ன?
இந்த வழக்கில் கடந்த 1ஆம் தேதி ஆஜரான சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அன்றைய தினம் ராகுல் காந்தி ஆஜராகததால் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்றைய தினம் அதாவது ஜூன் 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று காலையில் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். பின்னர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனை அடுத்து, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின்போது அமித்ஷாவை கொலைகாரர் என ராகுல்காந்தி விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் உள்ள சூல்தான்பூர் நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பேழத ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மற்றொரு வழக்கறிஞரின் மரணம் காரணமாக வழக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது.
Also Read: மத்திய அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபு நாயுடு கேட்பது என்ன? வளைந்து கொடுக்குமா பாஜக?