5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாத இருந்த நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக யார் வருகிறார் என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடித்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெல்ல ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை முக்கிய காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, அவரே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் சரியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதினர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
ராகுல் காந்தி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 18:56 PM

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி  293 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியான I.N.D.I.A கூட்டணி 232 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மட்டும் 99 இடங்களை கைப்பற்றியது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என கூறப்பட்ட நிலையில், அதனை எல்லாம் பொய்யாக்கியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் 44 இடங்களிலும், 2019 தேர்தலில் 52 தொகுதிகளிலும் வென்ற காங்கிரஸ், 2024 தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. மக்களவையில் எந்த கட்சி 10 சதவீத இடங்களில் வெற்றி பெறுகிறதோ அதாவது 54 இடங்களில் வெல்கிறதோ அந்தக் கட்சிக்கே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலையில், இந்த முறை 99 இடங்களில் வென்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

Also Read: “வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்” எம்.பியாக பதவியேற்ற ராகுல் காந்தி.. உற்று கவனித்த பாஜக!


கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாத இருந்த நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக யார் வருகிறார் என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடித்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெல்ல ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை முக்கிய காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, அவரே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் சரியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதினர். இதுகுறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்தது. இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “18வது மக்களவையில் கடைகோடி நபரின் விருப்பங்களை பிரதிபலிக்க அவர்களின் குரலாய் ராகுல் காந்தி ஒலிப்பார் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையிலும் நாடு முழுவதும் பயணித்தார் ராகுல் காந்தி. இவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவார் என்று காங்கிரஸ் தலைவராக நான் நம்புகிறேன். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Also Read: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாலும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

 

Latest News