5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Gandhi : “மோடிக்கு ஞாபக மறதி” பைடனை வைத்து கலாய்த்த ராகுல் காந்தி!

Maharastra Election : அமெரிக்க அதிபர் ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் ஞாபக மறதியால் அவதிப்படுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.

Rahul Gandhi : “மோடிக்கு ஞாபக மறதி” பைடனை வைத்து கலாய்த்த ராகுல் காந்தி!
ராகுல் காந்தி (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Nov 2024 18:48 PM

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் ஞாபக மறதியால் அவதிப்படுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கலாய்த்துள்ளார். வரும் நவம்பர் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும் (பாஜக- முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வர் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்), எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் (காங்கிரஸ் – சிவசேனை உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரதமர் மோடியை கலாய்த்த ராகுல் காந்தி

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.  மகாராஷ்டிராவில் முகாமிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்ந நிலையில், இன்று அமராவதியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். இதில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பைடனை போல் ஞாபக மறதி இருப்பதாக கூறியுள்ளார்.


பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டதாக என் சகோதரி சொன்னார். அந்தப் பேச்சில் நாம் எதைச் சொன்னாலும் மோடியும் அதையே சொல்கிறார் என்று கூறினார். எனக்கு தெரியாது. அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டிருக்கலாம்.

Also Read : ராகுல் காந்தி பையில் என்ன இருந்தது? தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை!

“பைடனை போல் மோடிக்கு ஞாபக மறதி”

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனுக்கு ஞாபக மறதி. அவருக்கு பின்னால் இருந்து நினைவுபடுத்த வேண்டியிருக்கும். உக்ரைன் அதிபர் வந்ததற்கு, ரஷ்ய அதிபர் புதின் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் கூறினார்.

அவருக்கு ஞாபக மறதி. அதனால் அப்படி பேசுகிறார். அதேபோல, நமது பிரதமரும் நினைவை இழந்துவிட்டார். கடந்த ஓராண்டாக எனது உரைகளில் பாஜக அரசியல் சாசனத்தை தாக்கி வருகிறது என்று கூறி வருகிறேன் .

ஆனால், காங்கிரஸ் அரசியல் சாசனத்தை தாக்குகிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார். மக்கள் கோபமடைந்ததை அறிந்த அவர் இப்போது நான் அரசியல் சாசனத்தை தாக்குகிறேன் என்று கூறினார். காங்கிரஸும் இந்தியக் கூட்டணியும் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் என்று மக்களவையில் அவரிடம் சொன்னேன்.

Also Read : 50 ஆண்டுகளுக்கு பின் கயானா செல்லும் இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?

உங்கள் நினைவாற்றலை இழந்துவிட்டீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் இன்னும் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று கூறுகிறார். பிரதமர் மோடியிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னேன்.

பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிய வேண்டும் என்று கூறினேன். ஆனால், அடுத்த கூட்டத்தில் நான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவன் என்று பிரதமர் மோடி கூறுவார்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Latest News