மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் மாஸ்டர் பிளான்!
டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, ராகுல் காந்தியை காங்கிரஸ் மக்களவை குழு தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறாரா ராகுல் காந்தி? கடந்த 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக வெறும் 240 தொகுதிகளை மட்டுமே வென்றது. எனவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. அதே சமயத்தில், I.N.D.I.A கூட்டணி மட்டும் 235 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்றது. அதோடு, சங்லி தொகுதி சுயேச்சை வேட்பாளர் விஷால்பாட்டில் தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்தார். இதனால், காங்கிரஸ் 100 இடங்களை கைப்பற்றியிருக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, ராகுல் காந்தியை காங்கிரஸ் மக்களவை குழு தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: “மத்தியில் வலுவான அரசை என்டிஏ கூட்டணி அமைக்கும்” செய்தியாளரிடம் மோடி பேச்சு
காங்கிரஸ் மாஸ்டர் பிளான்
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபால், “இந்த தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெண்கள் பிரச்சனைகள், அக்னிவேர் மற்றும் சமூக நீதி பிரச்சனை போன்ற பிரச்சனைகளை எழுப்பினோம். இந்த விவகாரங்களை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம். மக்களவையில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு ராகுல் காந்தி சிறந்த நபர். தற்போதைய சூழ்நிலையில், ஒரு சிறந்த, வலுவான மற்றும் விழிப்புடன் கூடிய எதிர்க்கட்சி தலைவர் வேண்டும். இதற்கு ராகுல் காந்தி சிறந்த நபர்” என்றார்.
அப்போது, ராகுல் காந்தி இந்த முடிவை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்விக்கு பதலளித்த கே.சி.வேணுகோபால், “இது பற்றி ராகுல் காந்தி விரைவில் முடிவெடுப்பார். 3 அல்லது 4 நாட்களில் ரேபரேலி அல்லது வயநாடு எதை அவர் காங்கிரஸ் கட்சி மீண்டும எழுச்சி காண தொடங்குகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது சூழல் முற்றிலும் மாறியுள்ளது. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் உற்சாகமாக உள்ளனர்” என்றார்.
Also Read: 3வது முறை பிரதமராகும் மோடி.. பதவியேற்பில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்!