Rahul Gandhi: “சாவர்க்கரை அவமதிக்கிறீங்க” பாஜகவை கிண்டல் செய்த ராகுல் காந்தி!
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசியலமைப்பு தின விவாதம் நடந்து வருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் முதன்முதலாக எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசியலமைப்பு தின விவாதம் நடந்து வருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் முதன்முதலாக எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சி தலைவர் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பின் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அதில் இந்தியர்கள் பற்றி எதுவும் இல்லை.
“சாவர்க்கரை அவமதிக்கிறீங்க”
நமது இந்து தேசத்திற்கு வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய வேதம் மனுஸ்மிருதியாகும், இது நமது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகளுக்கு அடிப்படையாக மாறியுள்ளது. இந்த புத்தகம், பல நூற்றாண்டுகளாக, நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தை குறியீடாக்கியுள்ளது.
அரசமைப்பு, இந்தியர்கள் பற்றி மாற்று கருத்து கொண்டிருப்பதை சாவர்க்கரே எழுதியுள்ளார். பாஜக தலைவர்கள், அரசியலமைப்பை புகழ்ந்து சாவர்க்கரின் நினைவை அவமதிக்கிறார்கள். நான் உங்களிடம் (பாஜக) கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் தலைவரின் வார்த்தைகளில் நிற்பீர்களா?
உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஏனெனில் நீங்கள் அரசியலமைப்பைப் பாதுகாப்பது பற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது, நீங்கள் சாவர்க்கரை கேலி செய்கிறீர்கள். சாவர்க்கரை தவறாகப் பேசுகிறீர்கள், அவதூறு செய்கிறீர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று இந்தியாவில் அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளனர். ஆனால் அவர்களை புகழ பாஜக தயங்குகிறது. பெரியார், அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களை நாங்கள் வணங்குகிறறோம். நீங்கள் அவர் புகழ்வதில்லை. இந்தியா முன்பு எப்படி நடத்தப்பட்டதோ அப்படித்தான் இயங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
Also Read : அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர கண்காணிப்பு
ஒட்டுமொத்த தேசத்தின் கட்டை விரலை வெட்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள். மும்பையில் உள்ள தாராவி நிலம் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த முடிவு தாராவி வாசிகளுக்கு கட்டை விரலை வெட்டுவது போன்றது. அக்னிவீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத்தில் சேர நினைத்த இளைஞர்களின் கட்டை விரலை அரசு வெட்டுகிறது.
இன்று டெல்லிக்கு வெளியே விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. சாதிகளை கணக்கிடுவது அவசியம், எனவே நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு 50 சதவீத இடஒதுக்கீட்டை உடைப்போம்” என்றார்.
ராகுல் காந்தி பதிலடி கொடுத்த பாஜக
இவரை தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கருத்துகள் வெளியான சிறிது நேரத்திலேயே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திரா காந்தி எழுதிய கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் ராகுலின் கருத்து தவறானது என்று கூறினார்.
Also Read : பிபிஎஸ்சி வினாத்தாள் கசிந்ததாக புகார்.. போராட்டம் நடத்திய தேர்வரை அறைந்த அதிகாரி!
1980ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்தில் சாவர்க்கரை “இந்தியாவின் குறிப்பிடத்தக்க மகன்” என்று குறிப்பிட்டு எழுதியிருந்த கடிதத்தை கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளார். ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர், அரசியல் சாசனத்தின் அதிகாரம் தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவசரநிலையை முடிவுக்கு கொண்டுவர கட்டாயப்படுத்தியது.
1975-77ஆம் ஆண்டுக்கு இடையில் பல உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை அசைப்பவர்களுக்கு, அதில் எத்தனை பக்கங்கள் உள்ளன என்பது கூடத் தெரியாது. இந்திரா காந்தியை எமர்ஜென்சியை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் சட்டத்தின் அதிகாரம்தான் காரணம்” என்று கூறினார்.